• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-25 13:58:50    
பூயி இன ying pan கிராமம்

cri
நேயர்களே, தற்போது, நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது சீனாவின் தென்மேற்குப்பகுதியின் bu yiஇனத்தின் கிராமவாசிகள் பாடிய பாடலாகும். ying pan கிராமம் என்னும் bu yiஇனக் கிராமம், gui yang நகரின் புற நகரில் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, அதன் வரலாற்று மூல வளங்களையும் தேசிய இனப் பண்பாட்டு மூல வளங்களையும் சார்ந்து, ying pan கிராமம், சுற்றுலாத் துறையை வளர்த்து வருகின்றது. இதனால், கிராமவாசிகளின் வாழ்க்கை நிலை, உயர்ந்துள்ளது. இக்கிராமத்தின் தோற்றத்தில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டது. ying pan கிராமத்தின் தலைவர் cen desongஇன் தலைமையில் கிராமவாசிகள் வசதியான வாழ்க்கை நடத்தத் துவங்கியுள்ளனர். இன்றைய நிகழ்ச்சியில், ying pan கிராமத்தில் நுழைந்து, இக்கிராமம் பற்றி பார்ப்போம்.

cen desong என்பவருக்கு இவ்வாண்டு வயது 40. அவர், உயரமில்லாத உடல் வாகு கொண்டவர். cen desong வாழும் ying pan கிராமத்தில் bu yi இன மக்கள் தொகை, மொத்த மக்கள் தொகையில் 96 விழுக்காடு ஆகும். விளை நிலம், குறைவாக இருக்கின்றது. 2002ம் ஆண்டு, கிராமவாசிகளால் cen desong கிராமத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டப் பின், கிராமவாசிகளின் குறைவான வருமானம், ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள அதிகப்படியான உழைப்பு ஆற்றல் ஆகிய கடும் உண்மையை எதிர்நோக்கினார். அவரது தலைமையிலான கிராமவாசிகள், வளமான பாதையில் எவ்வாறு நுழைவது என்பது cen desong எப்போதும் எண்ணி வருகின்ற பிரச்சினையாகும். அவர் கூறியதாவது.

கிராமத்தில் வறுமைக்கும் செல்வத்துக்குமிடை இடைவெளி, பெரிதாக இருக்கின்றது. பொருளாதாரமும் சுற்றுச்சூழலும் மோசமாக இருந்தன. சிலர் சிறு உணவகங்களை நடத்தி, அதிக பணம் சம்பாதித்தனர். ஆனால், மிகப் பெரும்பாலான கிராமவாசிகள், கிராமத்தில் வேளாண் துறையில் ஈடுபட்டனர். விளை நிலம் குறைவாக இருப்பதால், பெரும்பாலான கிராமவாசிகள், பயிரிடுலிலும் நீர்வாழ்வன வளர்ப்பிலும் ஈடுபடவோ செல்வம் அடையவோ முடியவில்லை என்றார் அவர்.

இந்த நிலைமையை மாற்றும் வகையில், cen desong தலைமையில் கிராமவாசிகள், தொழில் நிறுவனங்களை நடத்தும் பாதையில் நுழையத் தொடங்கினர். cen desong வெளியூர் வணிக முதலீட்டை ஆக்கப்பூர்வமாக உட்புகுத்தினார். வெளியூர் தொழில் நிறுவனங்களின் உதவியால், கிராமவாசிகள் வறுமையிலிருந்து விடுபட்டு, வளமடைய வேண்டும் அவர் விரும்பினார். ஆனால், ying pan கிராமம், gui yang நகரின் நீர்வளப் பாதுகாப்பு மண்டலத்தில் இருப்பதால், தொழில் நிறுவனங்களின் நுழைவுக்கான கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வரையறையை எட்டாமல் இருப்பதால், பல தொழில் நிறுவனங்கள், ying pan கிராமத்தில் நுழைய முடியவில்லை. தொழில் நிறுவனங்கள் தொடர்பான cen desongஇன் விருப்பம் தவிடுபொடியாக்கப்பட்டது. எனவே, ying panஇன் பார்வை கிராமத்தின் பழங்காலக் காவலரண்மீது திரும்பியது.

அவர் கூறுகிறார்: நமது கிராமத்தில் ming வம்சத்தின் zhu yuanzhang காலத்தில் விட்டுச் சென்ற பழங்காலக் காவலரணும் செழுமையான bu yi இனப் பண்பாடும் உள்ளன. எனவே, நாம் பழங்காலக் காவலரணில் சுற்றுலாவையும் தேசிய இன உணவுச் சுற்றுலாவையும் மேற்கொள்ள வேண்டும் என நான் கருதுகிறேன்.

ying pan கிராமத்தின் பழங்காலக் காவலரண் பொழுது போக்கு நிறுவனம் நிறுவப்பட்டப் பின், பழங்காலக் காவலரண் சுற்றுலா விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பழங்காலக் காவலரணின் சுற்றுப்புறங்களில் உணவகங்களை நடத்தும் கிராமவாசிகளின் வியாபாரம் மேலும் விறுவிறுப்பாக இருக்கின்றது. இந்த நிறுவனம், கிராமவாசிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளது. வெளியூர்களிலிருந்து வந்த கிராமவாசிகள் பலர் ying pan கிராமத்தில் பணி புரிகின்றனர். அவர் கூறியதாவது

நாம், சுற்றுலாப் பள்ளி ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுத்தோம். இந்த ஆசிரியர்கள், நமது கிராமவாசிகளுக்குச் சிறப்பு பயிற்சி அளித்தனர். பழங்கால காவலரணின் ராணுவப் பண்பாட்டுத் தனிப்பண்புகளைக் காட்டும் வகையில், நாம் அழைப்பு விடுத்த படைவீரர்கள் பழங்கால காவலரணின் பணியாளர்களுக்கு இராணுவப் பயிற்சி அளித்தார்கள் என்றார் அவர்.

ying pan கிராமத்தின் பழங்கால காவலரண் சுற்றுலா, guiyang நகரவாசிகளை ஈர்த்துள்ளது. ying pan கிராமத்துக்கு வந்த பயணிகள், மலைகளில் ஏறி, பழங்கால இராணுவப் பண்பாட்டை அறிந்து கொண்டனர். பழங்காலகாவலரணைப் பார்வையிட்ட பின், பயணிகள், bu yi இனத்தின் விவசாயிகளின் வீட்டில் அவர்கள் சடைத்த சுவை மிக்க உணவுகளைச் சாப்பிட்டு, bu yi இனத்தின் சிறப்பு மிக்க தேசிய ஆடல்பாடல்களையும் கண்டு களிக்க முடியும். ஓய்வு, பொழுது போக்கு ஆகியவற்றைக் கொண்ட ying pan கிராமத்தின் பழங்கால காவலரண் சுற்றுலா, ஆண்டுக்கு ஆண்டு, சிறப்பாகி வருகின்றது. சுற்றுலாவின் செழிப்பு, ying pan கிராமத்துக்கு மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்று cen desong கூறினார்.

gui yang நகரிலுள்ள ying pan கிராமத்தின் பழங்காலக் காவலரண் பொழுது போக்கு நிறுவனம் நிறுவப்பட்டப் பின்,சுற்றுலா உணவுத் துறை வளர்ந்தது. இக்கிராமத்தி்ன் சொத்து, முந்திய ஒரு கோடி யுவானிலிருந்து 3 கோடி யுவானாக உயர்ந்துள்ளது. கிராமவாசிகளின் வாழ்க்கை நிலை, முந்திய நிலையை விட, நன்றாக இருக்கின்றன.

இப்போது, ying pan கிராமத்தின் பழங்காலக் காவலரண் நிறுவனம், குறிப்பிட்ட அளவே கொண்டிருப்பதால், cen desongயின் மனதில் மேலும் பெரிய திட்டம் உள்ளது.

ying pan கிராமத்தின் சுற்றுலாத் துறையும் இக்கிராமவாசிகளின் வாழ்க்கையும் மேலும் வளமடையச் செய்யும் வகையில்,

இந்நிறுவனம், சர்வதேசச் சிறப்புச் சுற்றுலா மேலாண்மை தொழில் நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு மேற்கொண்டு இந்நிறுவனத்துக்கு முன்னேறிய மேலாண்மை கருத்துகளையும் நிதிகளையும் கொண்டு வர வேண்டும் என்பது அவரது பெரும் விருப்பமாகும். நேயர்கள் இது வரை, bu yiஇனying pan கிராமத்தின் கதைகளைப் பற்றி கேட்டீர்கள்.