• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-25 09:38:24    
உஸ்பெக் இனத்தைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர்

cri
"உஸ்பெக் இனத்தைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் பாஃத்திமா மெஹ்மூத் பற்றி" கூறுகின்றோம்.
பாஃத்திமா மெஹ்மூத் அம்மையார், உஸ்பெக் இனத்தைச் சேர்ந்தவர். சீனாவின் முதலாவது சிறுபான்மை தேசிய இன வழக்கறிஞர் அலுவலகத்தை அவர் நிறுவினார். சிங்கியாங்கின் நீதி சட்டத் துறையில் அவர் வேலை புரிகின்றார். இன்றைய நிகழ்ச்சியில், பாஃத்திமா மெஹ்மூத் அம்மையார் பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்துகினறோம்.

பாஃத்திமா மெஹ்மூத் வட சிங்கியாங்கின் Ta Cheng நகரில் வாழ்கின்றார். சீனாவுக்கும் கஸகஸ்தானுக்குமிடை நுழைவாயிலுக்கு பத்து கிலோமீட்டருக்கு மேலான தொலைவில் இந்நகர் அமைந்துள்ளது. உஸ்பெக், உய்கூர், Tartar, ரஷியா, தாவோர் உள்ளிட்ட 29 சிறுபான்மை தேசிய இனங்கள் இங்கு வாழ்கின்றன. பாஃத்திமா மெஹ்மூத் அம்மையாரின் மூதாதையர் வணிகத் துறையில் ஈடுபட்டவர்களாவர். அவர் உஸ்பெக் இனத்தின் முதலாவது பெண் வழக்கறிஞர் ஆவார். சிறு வயதில் அவர் கண்டுரசித்த "ஆவாரா" என்னும் இந்தியத் திரைப்படம் இதற்கு காரணமாகும். அவர் கூறியதாவது:
"திரைப்படத்தில் ஒரு பெண் வழக்கறிஞர் Lazi என்பவருக்கு நியாயம் கூறினார். இதற்கு பின், Laziவின் வாழ்க்கை மாறியது. இது எனது மனம் நெகிழச்செய்தது. பெண் வழக்கறிஞரின் தோற்றம் மற்றும் கூற்றுகள், என மீது தாக்கம் செய்தன. பின்னர், வழக்கறிஞர் பணியைத் தெரிவு செய்தேன்" என்றார், அவர்.
1985ஆம் ஆண்டு, நல்ல மதிப்பெண்ணுடன், சிங்கியாங் பல்கலைக்கழகத்தின் சட்டத் துறையிலிருந்து அவர் பட்டம் பெற்றார். இதற்கு பின், அவர் Ta Cheng நகர் திரும்பினார். உள்ளூர் அரசு உருவாக்கிய பொருளாதார வழக்கறிஞர் அலுவலகத்தில் வழக்கறிஞராக பணி புரியத் தொடங்கினார். அவர் கையாண்ட முதல் வழக்கு, சட்ட பணியின் முக்கியத்துவத்தை அவர் புரிந்து கொள்ளச் செய்தது. இது ஒரு சொத்து கையேற்பு சர்ச்சை வழக்காகும். ரஷிய இனப் பெண் Kuknyvaவின் கையேற்பு உரிமை, அவரது அண்ணன்களால் பறிக்கப்பட்டது. தமக்கு உதவி செய்யுமாறு பாஃத்திமா மெஹ்மூத் அம்மையாரிடம் அவர் கேட்டுக் கொண்டார். போதிய ஆதாரங்களைக் கொண்டு, பாஃத்திமா மெஹ்மூத் வழக்கில் வெற்றி பெற்றார். இது பற்றி பாஃத்திமா மெஹ்மூத் கூறியதாவது:
"அப்போது நான் வழக்கறிஞராக பணி புரியத் துவங்கிய காலம். நான் கற்றுக் கொண்ட சட்ட அறிவுகளைக் கொண்டு, அவரது சட்டப்பூர்வ உரிமையைப் பாதுகாக்க முடியும் என்று உணர்ந்தேன். ஆனால், அவரைப் பொறுத்த வரை, மிக முக்கியத்துவம் வாய்ந்த விடயம் இதுவாகும். வழக்கறிஞராக பணி புரிவது, முக்கியத்துவம் வாய்ந்தது" என்றார், அவர்.
பாஃத்திமா மெஹ்மூத் தமது பணியில் தேர்ச்சி பெற்றார். பல சிறுபான்மை தேசிய இன மொழிகளை அவரால் பேச முடியும். தமக்கு உதவி செய்யுமாறு அவரிடம் கேட்டுக் கொண்ட மக்கள் அதிகம். அவர் கையாண்ட வழக்குகள் அதிகம். இருந்த போதிலும், அப்போதைய சமூக நிலைமையின் காரணமாக, 1995ஆம் ஆண்டு அவர் வணிகம் செய்யத் துவங்கினார். ஆனால், அவரது தந்தையின் கூற்று, அவர் வழக்கறிஞர் பணியில் மீண்டும் ஈடுபடச் செய்தது. அவர் கூறியதாவது:

"'உஸ்பெக் இனத்தவர்களி்ல், ஆயிரக்கணக்கான வணிகர்கள் இருக்கின்றனர். ஆனால், தலைமுறை தலைமுறையாக உஸ்பெக் இனத்தவர்களில், நீ, ஒரே ஒரு வழக்கறிஞராக இருக்கிறாய். வழக்கறிஞர் பணியில் ஈடுபடுவது உனக்கு துணை புரியும். தவிர, வழக்கறிஞராக, நீ மற்றவர்களுக்கு உதவி செய்ய முடியும்' என்று அப்போது எனது தந்தை என்னிடம் கூறினார். தந்தையின் கூற்றைக் கேட்டப் பின், எனது எண்ணம் மாறியது" என்றார், அவர்.
கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக, குற்றிவியல் வழக்குகள், குடிமய விவகார வழக்குகள், பொருளாதார வழக்குகள், அன்னியருடன் தொடர்புடைய வழக்குகள் உள்ளிட்ட சுமார் 10 ஆயிரம் வழக்குகளை பாஃத்திமா மெஹ்மூத் கையாண்டுள்ளார். 50க்கு அதிகமான நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசகராக அவர் சேவை புரிந்துள்ளார். வழக்கு தொடுத்தவர்கள் சுமார் 10 கோடி யுவானைத் திரும்ப பெறுவதற்கு அவர் உதவி செய்துள்ளார். சிறுபான்மை தேசிய இனத்தைச் சேர்ந்த வழக்கறிஞராக, பாஃத்திமா மெஹ்மூத் நலிந்த குழுவினர் மீது கவனம் செலுத்துகின்றார். வறிய மக்களுக்கும், ஊனமுற்றோருக்கும் பாஃத்திமா மெஹ்மூத்தும், அவரது அலுவலகத்தில் வேலை செய்யும் வழக்கறிஞர்களும் அடிக்கடி இலவச சட்ட ஆலோசனைகளை வழங்குகின்றனர். அவர் கூறியதாவது:

"நலிந்த குழுவினர், எடுத்துக்காட்டாக, குறைந்த பட்ச வாழ்க்கை தர உத்தரவாதம் அளிக்கப்படவரின் வாழ்க்கை கடினமானது. அவர்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகின்றோம். வெளிநாடுகளில் வாழும் சீனரின் உறவினர் சீனர்களுக்கும் இலவச சட்ட ஆலோசனை அடிக்கடி வழங்குகின்றோம்" என்றார், அவர்.
2006ஆம் ஆண்டின் பிப்ரவரி திங்கள், Ta Cheng நகராட்சி அரசு, பாஃத்திமா மெஹ்மூத் அம்மையாரின் வழக்கறிஞர் அலுவலகத்தில், "மகளிர் மற்றும் குழந்தைகளின் உரிமைகளையும் நலன்களையும் பேணிக்காக்கும் பணி நிலையத்தையும்", "வெளிநாடுகளில் வாழும் சீனரின் உறவினர்களுக்கான பணி நிலையத்தையும்" நிறுவியது. தமக்கு நியாயம் பெற்றுத் தருமாறு அவரிடம் கேட்டுக் கொள்ளும் மக்கள் மென்மேலும் அதிகம். உண்மையில், உள்ளுர் பிரதேசத்தில் சட்ட சேவையை மேலும் செவ்வனே வழங்கும் பொருட்டு, இளம் வழக்கறிஞர்களுக்கு அவர் பயிற்சி அளித்து வருகின்றார். அவர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் வேளையில், அவர்களுக்கு தமது அனுபவத்தை விவரிக்கின்றார்.
அவர் பணியில் பல சாதனைகளைப் பெற்றிருக்கின்றார். இருந்த போதிலும், சிறுபான்மை தேசிய இனத்தைச் சேர்ந்த பெண் வழக்கறிஞராக, அவர் சிலரின் தப்பு எண்ணத்தை எதிர்நோக்க வேண்டியிருந்தது. பணி மீதான அவரின் ஆவல், அவரது சக பணியாளர்களை மனமுருகச்செய்கிறது. இதே அலுவலகத்தில் வேலை புரியும் வழக்கறிஞர் Wang Chao Yang கூறியதாவது:


"துவக்கத்தில் சில சமயங்களில், அவரது பணியை சிலர் புரிந்து கொள்ளவில்லை. வழக்கறிஞர், பொது மக்களுக்கு உதவி செய்ய முடியும் என்று அவர் கருதுகின்றார். இதனால், இத்துறையில் ஈடுபடுவதில் அவர் ஊன்றி நிற்கின்றார். பொது மக்கள் படிப்படியாக வழக்கறிஞர் பணியை புரிந்து கொண்டிருக்கின்றனர். ஆண் சக பணியாளர்களாகிய நாங்கள் அவரைப் பாராட்டி, அவருக்காக பெருமை கொள்கின்றோம்" என்றார், அவர்.
சட்டத் துறையில் ஈடுபடும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டுத் தேசியக் கமிட்டி உறுப்பினராக, இவ்வாண்டு கூட்டத்தொரின் போது, சிங்கியாங்கின் அடி மட்ட சிறுபான்மை தேசிய இன நீதிபதி அணியை வலுப்படுத்துவது பற்றிய கருத்துருவை அவர் முன்வைத்தார். கூட்டத்தொடரின் விவாதக் கூட்டத்தில் சீனத் தலைவர் ஒருவர் இக்கருத்துருவுக்குப் பதில் அளித்தார். அரசியல் கலந்தாய்வு மாநாட்டு தேசியக் கமிட்டி உறுப்பினராக, அரசியல் விவகாரத்தில் பங்கெடுத்து, இவற்றை பற்றி விவாதிக்கும் அவரது பேரெழுச்சி அதிகரித்துள்ளது. இனிமேல், சிறுபான்மை தேசிய இனப் பிரதேசத்தின் மக்களுக்கு சேவை புரிய தன்னால் இயன்றதனைத்தையும் செய்ய உள்ளதாக பாஃத்திமா மெஹ்மூத் தெரிவித்தார்.
நேயர்கள் இது வரை "உஸ்பெக் இனத்தைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் பாஃத்திமா மெஹ்மூத் பற்றி" கேட்டீர்கள். இத்துடன், இன்றைய "சீன மகளிர்" நிகழ்ச்சி நிறைவுற்றது.