திபெத்திலான வர்த்தக அதிகரிப்பு
cri
சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்து தொடர்புடைய வாரியங்களின் புள்ளிவிபரங்களின் படி இவ்வாண்டின் முதல் மூன்று திங்களில் திபெத்தின் வெளிநாட்டு வர்த்தக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை கடந்த ஆண்டின் அதேகாலத்தில் இருந்ததை விட 16.2 விழுக்காடு அதிகரித்தது. இதற்கிடையில் அதன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் மொத்த தொகை 8 கோடியே 93 லட்சம் அமெரிக்க டாலரை எட்டியது. மார்ச் 14ம் நாள் வன்முறை செயல்கள் திபெத்தின் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு குறிப்பிட்ட அளவில் பாதிப்பு ஏற்படுத்திய போதிலும் புள்ளிவிபரங்களின் எண்ணிக்கையை பார்த்தால் திபெத்தின் வெளிநாட்டு வர்த்தகம் தொடர்ந்து வலுவான வளர்ச்சியை நிலைநிறுத்தியுள்ளது.
|
|