• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-28 10:14:06    
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பண்பாட்டு நடவடிக்கைகள்

cri

ஆகஸ்ட் திங்கள் 8ம் நாள் 29வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பெய்ஜிங்கில் துவங்கும். இந்த மாபெரும் விழாவை வரவேற்கும் வகையில், மார்ச் திங்கள் முதல் செப்டெம்பர் திங்கள் வரை, பெய்ஜிங் மாநகரத்தில் ஒலிம்பிகுடன் தொடர்புடைய பல முக்கிய பண்பாட்டு நடவடிக்கைகளை நடத்துவதாக சீன பண்பாட்டு அமைச்சகம், பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழு ஆகியவை வாரியங்கள் தீர்மானித்துள்ளன.

உலகின் 80 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 20 ஆயிரம் கலைஞர்கள் அழைப்பின் பேரில், ஏறக்குறைய 260 தலைசிறந்த நிகழ்ச்சிகளை அரங்கேற்றியுள்ளனர். அதேவேளையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வடிவத்திலான 160 பெரிய கண்காட்சிகளும் மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கைகளில் கலந்துகொள்வோ எண்ணிக்கை 40 இலட்சத்தை எட்டும் என்று தெரிகிறது.


பண்பாட்டை மற்றும் விளையாட்டுடன் இணைப்பது என்பது ஒலிம்பிக் விளையாட்டின் பாரம்பரிய எழுச்சியாகும்.நவீன ஒலிம்பிக் சாசனப்படி, விளையாட்டு, பண்பாடு மற்றும் கல்வி என்பவை ஒலிம்பிக் விளையாட்டின் 3 முக்கிய பகுதிகளாகும். ஒலிம்பிக் விளையாட்டை உபசரிக்கும் ஒலிம்பிக் விளையாட்டு பண்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், வெளிநாடுகளிடம் சொந்த பண்பாடுகளை வெளிப்படுத்துவதோடு, வெளிநாடுகளின் பண்பாடுகளை ஏற்பாடும் செய்யும் நகரம் உட்புகுவது, சர்வதேசப் பண்பாட்டுப் பரிமாற்றங்களை முன்னேற்றுவதற்கு துணை பரியும். 2000ம் ஆண்டு சிட்னி மற்றும் 2004ம் ஆண்டு Athens ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் பண்பாட்டு நடவடிக்கைகள் மாபெரும் வெற்றி பெற்றன. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு, சீன கலைஞர்கள், உலகின் பல்வேறு பிரதேசங்களின் கலைஞர்களுடன் இணைந்து பங்காற்ற விரும்புகின்றனர்.


நண்பர்களே, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பண்பாட்டு நடவடிக்கைகள் என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.