• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-28 17:07:57    
ஒலிம்பிக் விளையாட்டு சந்தையின் வளர்ச்சி

cri
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நெருங்கி வரும் போது, இப்போட்டிக்கான சந்தையின் வளர்ச்சிப் பணி, முக்கிய காலக்கட்டத்தில் நுழைந்துள்ளது. தற்போது, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஒத்துழைப்பு நிறுவனங்களைத் திரட்டி தீர்மானிக்கும் பணி ஏற்கனவே முடிந்துள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் சிறந்த பல தொழில் நிறுவனங்கள் இப்போட்டிக்கான ஒத்துழைப்பு நிறுவனங்களாக மாறியுள்ளன. இவை நிதி, பொருட்கள், தொழில் நுட்பம் மற்றும் சேவைத் துறை களில் முக்கிய பங்காற்றுவது மட்டுமல்ல, சமூக பொது நலப்பணிகளையும் மேற்கொண்டு வருகின்றன.

இது வரை, 63 தொழில் நிறுவனங்கள் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஒத்துழைப்பு நிறுவனங்களாக மாறியுள்ளன. Cocacola, general electric, Kodak ஆகிய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கான 12உலக ஒத்துழைப்பு நிறுவனங்கள், சீன வங்கி, volkswagan உள்ளிட்ட 11 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஒத்துழைப்பு நிறுவனங்கள், haier, yili போன்ற 10 இரண்டாம் நிலையான ஒத்துழைப்பு நிறுவனங்கள் ஆகியவை இதில் அடங்கும். போதுமான நிதி, பொருட்கள், தொழில் நுட்பம் மற்றும் சேவை ஆதரவுகளை இந்தத் தொழில் நிறுவனங்கள் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு வழங்கும். அதன் மூலம், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு தலைசிறந்த பொருட்களின் அடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவைச் சேர்ந்த சந்தையின் வளர்ச்சி அலுவலகத் தலைவர் yuanbin அம்மையார் தமது கருத்துக்களைத் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

உற்பத்திப் பொருட்கள் மற்றும் வணிகச் சின்னங்களை விளம்பரப்படுத்துவது, ஒலிம்பிக் விளையாட்டை முன்னேற்றுவது, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான எழுச்சியைப் பிரச்சாரம் செய்வது ஆகிய கருத்துக்களில் இந்தத் தொழில் நிறுவனங்கள் நெருக்கமாக இணைந்து வருகின்றன. அத்துடன், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் அறிவு, குறிக்கோள் மற்றும் எழுச்சியையும் இந்தத் தொழில் நிறுவனங்கள் பரப்புகின்றன. தவிர, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியையும் விளம்பரம் செய்கின்றன. இவற்றையெல்லாம், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு முக்கிய பங்காற்றுவது என்று உறுதியாக சொல்லலாம் என்றார் அவர்.

சீனாவின் தொழில் நிறுவனங்களைப் பொறுத்துவரை, 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, முன்கண்டிராத ஒரு வாய்ப்பாகும். சர்வதேச தொழில் நிறுவனங்களைப் பொறுத்து, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, சீனாவின் சந்தையை விரிவாக்குவதற்கு வலிமையான வாய்ப்பை வழங்கும்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஒத்துழைப்பு நிறுவனமாக மாறுவது, சீனாவிலுள்ள Atos origin நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நன்மை பயக்கும் என்று அந்நிறுவனத்தின் துணை நிர்வாகத் தலைவர் patrik adiba தெரிவித்தார். அவர் கூறியதாவது:

எமது நிறுவனம், மேலதிகமான சீனத் தொழில் நிறுவனங்களுடன் ஒத்துழைத்து, சீனாவிலுள்ள இந்நிறுவனத்தின் வளர்ச்சியை விரைவுப்படுத்தியுள்ளது என்றார் அவர்.

உலகில் பல முன்னணி தொழில் நிறுவங்களின் ஒத்துழைப்புகளை பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஈர்த்து வருகிறது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைப் பயன்படுத்தி, பல்வேறு வணிக நடவடிக்கைகளை ஆக்கப்பூர்வமாக மேற்கொள்வதோடு, சீனச் சமூகத்துக்கு இந்தத் தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன.

Lenovo குழுமம், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மிக உயர்வான சீன ஒத்துழைப்பு தொழில் நிறுவனமாக மாறுவது என்பது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் வரலாற்றில் முதல் முறையாகும். ஒலிம்பிக் தொடர்புடைய வணிக நடவடிக்கைகளின் வழிமுறைகளைப் புத்தாக்கம் செய்வதோடு, இக்குழுமம் பல்வேறு சமூக பொது நலப் பணிகளிலும் ஆக்கப்பூர்வமாகக் கலந்துகொண்டு வருகின்றது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மேலதிகமான சீன மக்கள் கலந்துகொள்ளும் வகையில், 2006ம் ஆண்டு, ஆயிரம் மாவட்டங்களில் ஒலிம்பிக்-Lenovo நடவடிக்கைகளை Lenovo குழுமம் மேற்கொண்டது. சீனாவின் எண்ணூறு மாவட்டங்களில் ஒலிம்பிக் விளையாட்டு கருத்துக்களை பரப்பி வருகிறது. இந்நடவடிக்கைகளில் ஏறக்குறைய 80 இலட்சம் மக்கள் பங்கெடுத்துள்ளனர். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி கொண்டு வரும் மகிழ்ச்சியை மேலதிகமான மக்கள் அனுபவிப்பது, இந்நடவடிக்கைகளின் நோக்கமாகும் என்று இக்குழுமத்தின் துணைத் தலைவர் chenshaopeng தெரிவித்தார். அவர் கூறியதாவது:

ஒலிம்பிக் விளையாட்டுப் போடட்டியில் தொலைத் தூர பிரதேச மக்களும் கலந்துகொண்டு பகிர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, சீனாவின் ஒரு மாபெரும் விழாவாக இருக்கிறது. மாநகரங்களிலுள்ள நகரவாசிகள் இதில் எளிதில் கலந்துகொள்ளலாம். ஆனால், தொலைத்தூரப் பிரதேச மக்கள் இதில் பங்காற்றுவது கடினம். எனவே, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் அவர்கள் நெருக்கமாகத் தொடர்புகொள்ள வைப்பது எமது குழுமத்தின் கடப்பாடாகும் என்றார் அவர்.

இந்தச் சமூக பொது நலப்பணி, ஒலிம்பிக் ஒத்துழைப்பு தொழில் நிறுவனங்கள் சீனாவில் மேற்கொண்ட பல நடவடிக்கைகளில் ஒரு பகுதியாகும்.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஒத்துழைப்பு தொழில் நிறுவனங்கள், பல்வேறு பொது நலப் பணிகளில் ஆக்கப்பூர்வமாகக் கலந்துகொள்வது, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் எழுச்சியைப் பரப்புவதற்கு முக்கிய பங்காற்றியுள்ளது. சர்வதேச அரங்கில் தன்னை வெளிக்காட்டும் சிறப்பு வாய்ப்பை பெற்று, தங்களை பற்றி சிறந்த வெளிப்பாடுகளை இத்தொழில் நிறுவனங்கள் ஏற்படுத்தியுள்ளன என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் Jacques rogge வெகுவாகப் பாராட்டினார்.