• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-29 08:25:07    
இணையத் தொழில் நுட்பம் மூலம் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு ஆதரவு

cri
2008ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி உலகின் கவனத்தை ஈர்த்துள்ள மாபெரும் விழாவாகும். இணையத் தொழில் நுட்பம் மூலம் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு ஆதரவு அளித்து, இதைப் பரவல் செய்வது என்பது பல இணையதளத் தொழில் நிறுவனங்களின் விருப்பமாகும். சீனாவில் மிகப் புகழ்பெற்ற இணையதள நிறுவனமான SOHO கூட்டு நிறுவனம், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஒரேயொரு இணையதள ஆதரவு கூட்டு நிறுவனமாகும். தனிச்சிறப்பு மேம்பாட்டுடன், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பற்றிய செய்திகளைத் தமது கூட்டு நிறுவனம் முழு ஆண்டும் அறிவிக்கும் என்று இக் கூட்டு நிறுவனத்தின் துணைத் தலைமை இயக்குநர் CHEN LU MING கூறினாவர். அவர் கூறியதாவது

ஒலிம்பிக் தீபத் தொடர் ஓட்டம், போட்டிகளுக்கான சீன விளையாட்டு வீரர்களின் பயிற்சி, போட்டிகளுக்கான ஆயத்தப் பணி, ஒலிம்பிக் பற்றிய நடவடிக்கைகள் முதலியவை இந்த அறிவிப்புப் பணியில் ஒரு பகுதியாக உறுதிப்படுத்தப்படுகின்றன. போட்டிகள் நடைபெறும் போது, அவை பற்றிய செய்திகள், சாம்பியன் பட்டம் பெற்ற வீரர்களுடனான பேட்டிகள் ஆகியவை அறிவிப்புப் பணியில் இன்னொரு பகுதியாக மாறிவிடும். இது எமது ஒட்டுமொத்தத் திட்டமாகும். முழு உலகின் இணையப் பயன்பாட்டாளர்களுக்கு நம்பகமான, வேகமான, தாராளமான, ஆழமான, உயிர்த்துடிப்பான, பொறுப்பான செய்திகளையும் தகவல் சேவையையும் வழங்குவோம் என்றார் அவர்.

இதுமட்டுமல்ல, SOHO கூட்டு நிறுவனம் பெய்ஜிங் மாநகராட்சியுடனும் ஒத்துழைத்துள்ளது என்று அவர் தெரிவித்தார். இது பற்றி அவர் கூறியதாவது

பெய்ஜிங் மாநகராட்சியுடன் பெய்ஜிங்.com எனும் இணையதளத்தை நிறுவியுள்ளோம். பெய்ஜிங் நகரில் உணவு, தங்கும் விடுதி, சுற்றுலா, பொருட்களை வாங்குதல், பொழுதுபோக்கு முதலிய தகவல்களை பன்முகங்களிலும் பிரச்சாரம் செய்யும் இணையதளம் இதுவாகும். அடுத்த ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் நாட்களில், சாதாரண மக்களுக்குச் சிறப்பு ஹோட்டலில் தங்கியிருக்கும் வாய்ப்புகள் குறைவு. அவர்களில் சீட்டுகளை வாங்கிய பெரும்பாலானோர், சொந்தமாக தங்கும் விடுதிகளைத் தேடிக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு, உணவு, விடுதி, சுற்றுலா, பொருட்களை வாங்குதல், பொழுதுபோக்கு முதலிய துறைகளிலான தகவல்கள் மேலும் முக்கியமானவை. எமது இணையதளம் பெய்ஜிங் மாநகர் பற்றிய தகவல்களை பன்முகங்களிலும் விவரியும் கதவு ஆகும் என்றார் அவர்.

மேலும், புதிய செல்லிட இணையத் தொழில் நுட்பமும் பெய்ஜிங் ஒலிம்பிக்கிற்குச் சேவை புரியும். பெய்ஜிங் ஒலிம்பிக்கிற்கு சீனச் செல்லிடபேசி மற்றும் செய்தித் தொடர்பு கூட்டு நிறுவனம் நம்பகமான செல்லிட செய்தித் தொகுதியையும், கம்பி இல்லாத அகன்ற அலைவரிசை இணையச் சேவையையும் வழங்கும். போக்குவரத்து, பாதுகாப்பு, மருத்துவம், செய்தி அறிவிப்பு முதலிய துறைகளுடன் இவை தொடர்புடைவை என்று இக்கூட்டு நிறுவனத்தின் ஒலிம்பிக் அலுவலகத்தின் பொறுப்பாளர் HUANG TAO தெரிவித்தார். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் வரலாற்றில் முதலாவது அரசு செல்லிடபேசி இணையதளத்தைத் தமது கூட்டு நிறுவனம் நிறுவியுள்ளது என்று அவர் பெருமையுடன் தெரிவித்தார். அவர் கூறியதாவது

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் அரசு இணையதளத்தின் அடிப்படையில், ஒலிம்பிக் வரலாற்றில் முதலாவது செல்லிடபேசி ஒலிம்பிக் இணையதளத்தை சீன செல்லிடபேசி மற்றும் செய்தித் தொடர்பு கூட்டு நிறுவனம் நிறுவியுள்ளது. தற்போது இவ்விணையதளம் இயங்கத் துவங்கியுள்ளது. பொது மக்கள் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் பல்வேறு வடிவங்களில், செல்லிடபேசி இணையத்தில் செய்திகள், பதக்கப் பட்டியல், நிகழ்ச்சி நிரல் முதலியவை பற்றிய மிக புதிய தகவல்களை பெறலாம் என்றார் அவர்.

அடுத்த ஆண்டு, ஒலிம்பிக் விளையாட்டு அரங்குகள் மற்றும், திடல்கள், தொடர்புடைய நகரங்கள் ஆகியவற்றில் பொது இடங்களில், அகன்ற அலைவரிசை இணையத் தொழில் நுட்பத்தை சீனச் செல்லிடபேசி கூட்டு நிறுவனம் பன்முகங்களிலும் பரவல் செய்யும் என்று HUANG TAO கூறினார். ஒலிம்பிக் அதிகாரிகளும் செய்தி ஊடகங்களும் தகவல் மேடை வழங்கப்படுவர். செல்லிட இணையம் மூலம், அவர்கள், விளையாட்டுப் போட்டிகள் பற்றிய நிகழ்ச்சி நிரல், விளையாட்டு வீரர்களின் பதிவு, ஒலிம்பிக் வரலாறு பற்றிய படங்கள், புதிய தகவல்கள் முதலியவற்றை பெறலாம். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்குச் சேவை புரியும் தொண்டர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை எட்டக் கூடும். அவர்களுக்கென செல்லிடபேசியிடை அக இணைப்பு வசதியைச் சீனச் செல்லிடபேசி கூட்டு நிறுவனம் ஆராய்ந்து தயாரித்துள்ளது. கூடுதலான அக இணைப்பு வசதி இல்லாத நிலையில், தொண்டர்கள் தத்தமது செல்லிடபேசிகள் மூலம் குறுகிய தொலைவிலான தொடர்பு கொள்ளக் கூடும். இதுமட்டுமல்ல,அலை வழி அடையாளப்படுத்தல் தொழில் நுட்பம் மூலம், சீட்டுகளை வாங்கும் கம்பி இல்லாத வசதியும் அப்போது பயன்படுத்த எதிர்பார்க்கப்படும்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி உலகின் கவனத்தை ஈர்க்கும் மாபெரும் ஒரு விழாவாகும். ஆனால், இதனைச் சொந்தமாக நேரடியாக அனுபவிப்பவரின் எண்ணிக்கை குறைவு. பெரும்பாலானோர், வேறு வடிவங்கள் குறிப்பாக செய்தி அறிக்கையின் மூலம் போட்டிகளின் நிலைமையை அறிந்து கொள்கின்றனர். இதில், தொலைக்காட்சி ரசிகர்களின் எண்ணிக்கை மிக அதிகம். முழு உலகில் சுமார் 400 கோடி மக்கள் தொலைக்காட்சி மூலம் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளைக் கண்டு ரசிப்பர் என்று மதிப்பிடப்படுகின்றது. சீன மத்திய தொலைக்காட்சி நிலையம் சீனாவில் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பற்றிய செய்தி அறிவிக்கும் உரிமை பெற்ற ஒரேயொரு தொலைக்காட்சி நிலையமாகும். 7 தொலைக்காட்சி சேவைகள் மூலம் இது ஒலிம்பிக் போட்டிகளை பன்முகங்களிலும் அறிவிக்கும். CCTV.COM என்பது இதன் கீழுள்ள ஒரு இணையதளமாகும். இந்தக் கூட்டு நிறுவனத்தின் தலைவர் WANG WEN BIN கூறியதாவது

தற்போது, நாள்தோறும், 500 மணி நேர சட்டப்பூர்வ பதிப்புரிமையுடைய தரமான இணைய பட நிகழ்ச்சிகளை CCTV.COM வழங்குகின்றது. அதேவேளையில், 2 இலட்சத்து 20 ஆயிரம் மணி நேர இணைய பட நிகழ்ச்சிகளைக் கையாளும் ஆற்றலும் பதிவு ஆற்றலும் இதற்கு உண்டு. இணையதளம், செல்லிடபேசி முதலிய துறைகளில் மத்திய தொலைக்காட்சி நிலையத்தின் மேம்பாட்டுடைய நிகழ்ச்சிகளை முழுமையாகப் பரவல் செய்கின்றோம் என்றார் அவர்.