• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-29 08:25:14    
வசந்த விழா கொண்டாட்டங்கள் (ஆ)

cri

• சீனாவின் தென் பகுதி குய்ஷோவின் தொலைதூர மலைப்பகுதிகளில் மக்கள் சில சடங்கு நடனங்களை ஆடுகின்றனர். கெட்ட ஆவிகளையும், தொற்றுநோய்களையும் அண்டவிடாமல் துரத்த வசந்த விழாவின்போது இந்நடனம் ஆடப்படுகிறது. இதைக் காண தொலைவிலிருந்து மக்கள் இந்த மலைப்பகுதி கிராமங்களுக்கு வருகின்றனர். பல நாட்கள் நடைபெறும் இந்நடனம், முகத்தில் முகமூடியும், கைகளில் சாட்டையுமாக ஆடப்படுகிறது. ஆதிகால சமூகங்கள் ஆவிகளை அழைத்து, வரவேற்று, நன்றிகூறவதை இந்நடனத்தின் உள்ளடக்கங்களாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது

• ஷான்ஷி மாநிலத்தின் தொலைதூர கிராமமான ஆன்சாயில் ஒரு வழமை உண்டு. வசந்த விழாவின் போது சிலர் ஒரு குழுவாக இணைந்து இடுப்பில் முரசு அல்லது மேளத்தையும், கைகளில் கண்டை எனப்படும் வட்ட மணியையும் ஏந்திக்கொண்டு கிராமம் முழுதும் வீடு வீடாகச் சென்று புத்தாண்டு வாழ்த்து கூறுவார்களாம். வழியில் மேளமும், மணியும் ஒலிக்க அவர்கள் செல்லும்போது வேறு ஒரு குழு இவர்களை போன்றே மேள தாளத்துடன் எதிரில் வந்தால் என்ன செய்வார்களாம் தெரியுமா? அவரவர் வழியில் செல்வார்களா என்றால் இல்லை. இரு குழுவினரும் மேள தாள போட்டியில் ஈடுபடுவார்களாம். ஒருவரை மற்றவர் விஞ்சும் வகையில் மேளங்களையும், மணிகளையும் இசைத்து, இறுதியில் ஒரு குழு தோல்வியை ஒப்புக்கொண்டு வழிவிட்டால் ஒழிய மற்ற குழுவினர் அடுத்த அடி எடுத்து வைக்கமாட்டார்களாம். கேட்க வேடிக்கையாக இருக்கிறதல்லவா. ஆனால் இதுதான் அங்கே வாடிக்கையாக நடைபெறும் நிகழ்வு.

• ஷெஹுவோ: சீனாவின் கிராமப்புறங்களில் நடைபெறும் ஒரு வகை பெரிய கலைநிகழ்ச்சி ஷெ ஹுவோ. அரங்கேறி திறமைகளை வெளிப்படுத்துவோர் மட்டும் என்றில்லாமல் நிகழ்ச்சிக்கான முன் தயாரிப்பு உட்பட, ஏறக்குறைய கிராமத்தினர் அனைவருமே பங்கேற்கும் வகையில் அமையும் ஒரு கூட்டு நடவடிக்கையே ஷெ ஹுவோ. ஆதிகால பலியிடும் வழமைகளின் அம்சமாக அமைந்த இந்த ஷெ ஹுவோ, நிலத்தின் கடவுளான ஷெவிடம் நல்ல அறுவடைக்கும், நிறைவுக்கும் கெட்ட ஆவிகளை விரட்டும் மாய ஆற்றல் கொண்ட ஹுவோ என்ற தீ அல்லது நெருப்புக்கும் வேண்டி ஆடியதாக கூறப்படுகிறது.

• யுவான் ஷியாவ்: புத்தாண்டின் 15வது நாள் யுவான் ஷியாவ் என்ற விளக்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. வித விதமாய், சிறிதும், பெரிதுமாக வண்ண விளக்குகள் வீதியெங்கும் ஒளிவிசும். மக்கள் கைகளில் விளக்குகளை ஏந்தியபடி ஊர்வலமாய் செல்வர். அன்றை நாளில் மக்கள் புதிர்கள், விடுகதைகள் சொல்லி விளையாடி மகிழ்வர். ஜியாவ் சுவைப் போன்றே பசையரிசி உள்ளே வைக்கப்பட்ட யுவான் ஷியாவ் அல்லது தாங் யுவான் கொழுக்கட்டைகள் அன்று சிறப்பான உணவாக இருக்கும். மேற்கு ஹான் வம்சக்காலத்திலிருந்து இது ஒரு சிறப்பு திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.