• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-30 08:24:40    
சீனாவில் Kobori Shogo என்னும் ஜப்பானிய நாட்டவர் ஒருவரின் வாழ்க்கை

cri
Little Giant இயந்திரக் கருவி தொழில் நிறுவனம், சீனாவின் Ning Xia குவெய் இன தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகரான Yin Chuanனில் இருக்கிறது. இது ஜப்பானிய Yamazaki Mazak நிறுவனம் சீனாவில் முதலீடு செய்து நிறுவிய சிறப்பு எண்ணியல் கட்டுப்பாட்டு இயந்திரக் கருவி தயாரிப்பு தொழிற்சாலயாகும். உலகில் இயந்திரக் கருவி தயாரிப்புத் துறையில் Yamazaki Mazak நிறுவனம் புகழ் பெற்ற ஒரு நிறுவனமாகும். Kobori Shogo என்னும் ஜப்பானிய நாட்டவர், Little Giant இயந்திரக் கருவி தொழில் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் ஆவார். கடந்த எட்டு ஆண்டுகளாக, அவர் சீனாவில் பணி புரிந்து, வாழ்ந்து வருகின்றார். அவர், சீனா மீது ஆழ்ந்த அன்பு கொண்டுள்ளார். அவர் செய்தியாளரைச் சந்தித்ததும், சீன மொழியில் நேயர்களுக்கு வணக்கம் தெரிவித்தார்.

அவருக்கு வயது 60. 60 வயது, சீனாவில் ஆடவர் பணி ஓய்வு பெறுகின்ற வயது ஆகும். ஆனால் Kobori Shogo பணியில் சுறுசுறுப்பாக இருக்கின்றார். எட்டு ஆண்டுகளுக்கு முன், சீனத் தொழில் நுட்பம் மற்றும் முதலீட்டுச் சூழல் மீதான நம்பிக்கையின் காரணமாக, Yamazaki Mazak நிறுவனம், Ning Xiaவில் முதலீடு செய்து, தொழிற்சாலையை நிறுவியது. Kobori Shogo, Yamazaki Mazak நிறுவனத்தால் சீனாவுக்கு அனுப்பப்பட்டு, Little Giant இயந்திரக் கருவி தொழில் நிறுவனத்தை நிறுவுவதற்கான ஆயத்தப் பணியில் ஈடுபட்டார். Little Giant இயந்திரக் கருவி தொழில் நிறுவனத்துக்கு மேலதிக நிதித்தொகையை Yamazaki Mazak தொழில் நிறுவனம் ஒதுக்கீடு செய்யும் அதே வேளையில், சீனாவின் இதர பிரதேசத்திலான முதலீட்டையும் வலுப்படுத்தும் என்று Kobori Shogo தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"2005, 2006, 2007 ஆகிய மூன்று ஆண்டுகளில், Little Giant இயந்திரக் கருவி தொழில் நிறுவனம் சீரமைக்கப்பட்டுள்ளது. விரிவாக்கத் திட்டப்பணி நிறைவேறிய பின், முதலீட்டுப் பயனுக்கிணங்க, எமது நிறுவனம் மேலும் முதலீட்டை அதிகரிக்கும்" என்றார், அவர்.

Yamazaki Mazak கூட்டு நிறுவனம் உள்ளிட்ட பன்னாட்டு தொழில் நிறுவனங்கள், சீனாவிலான முதலீட்டை அதிகரித்து வருகின்றன. சீனப் பொருளாதாரத்தின் தொடர்ச்சியான, சீரான வளர்ச்சி மீதான இந்நிறுவனங்களின் நம்பிக்கையே இதற்கு காரணமாகும் என்று Kobori Shogo கருதுகின்றார். ஜப்பானிலிருந்து சீனாவுக்கு தாம் கொண்டு வந்த பொருட்களில், பெரும்பாலானவை சீனாவில் தயாரிக்கப்பட்டன என்றும், இதன் மூலம் சீனப் பொருட்களின் செல்வாக்கு முழுமையாக வெளிப்படுத்தப்படுகிறது என்றும் Kobori Shogo தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"சீனாவிலான அன்னிய நிறுவனங்களின் முதலீட்டுத் தொகை அதிகரிக்கும். சீனச் சந்தை மீதான மக்களின் எதிர்பார்ப்பும் அதிகரிக்கும் என்று நம்புகின்றேன். உலகில் உள்ள நாடுகளில் இத்தகைய வளர்ச்சி போக்கினை சீனா மட்டும் நிலைநிறுத்தியுள்ளது. சீனாவின் எதிர்காலம் ஒளிமயமானது என்று நினைகின்றேன்" என்றார், அவர்.

சீனாவில் தங்கியுள்ள எட்டு ஆண்டுகளில், சீனப் பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் வளர்ச்சி பற்றியும், நாளுக்கு நாள் பொது மக்களின் வாழ்க்கை அடைந்து வரும் மேம்பாடு பற்றியும் Kobori Shogo நேரடியாக உணர்ந்து கொண்டுள்ளார். நிறுவனத்தில், சீனப் பணியாளர்களின் வாழ்க்கை தர உயர்வை அவர் கண்கூடாக கண்டுள்ளார். அவர் கூறியதாவது:

"Little Giant இயந்திரக் கருவி தொழில் நிறுவனத்தின் பணியாளர்களின் வாழ்க்கைச் சூழலிலிருந்து, அவர்களின் வருமானம் அதிகரித்துள்ளது என்பதை காணலாம். எடுத்துக்காட்டாக, பெரும்பாலான பணியாளர்கள் திருமணம் செய்யும் போது, வீட்டை வாங்குவர். கடந்த சில ஆண்டுகளில், எங்கள் நிறுவனம் வேகமாக வளர்ந்து வருவதோடு, பணியாளர்களின் வருமானமும் அதிகரித்து வந்துள்ளது" என்றார், அவர்.

கடந்த எட்டு ஆண்டுகளில், நிறுவனம் பங்கிட்டு கொடுத்த வீட்டில் (apartment) அவர் தங்குகின்றார். ஓய்வு நேரத்தில், சாதாரண சீனர்களைப் போல், அவர் தமது வீட்டில் உணவு சமைத்து, துப்புரவு செய்கின்றார். வார இறுதியில் கடைக்கு பொருள் வாங்க செல்கின்றார், அல்லது நண்பர்களுடன் ஒன்று கூடி மகிழ்கிறார். அவரைப் பொறுத்த வரை, சீனாவில் வாழ்வதற்கும், ஜப்பானில் வாழ்வதற்குமிடையே பெரும் வித்தியாசம் இல்லை. அவர் கூறியதாவது:

"ஜப்பானில் வாழ்வதற்கும், Yin Chuan நகரில் வாழ்வதற்கும் இடையே பெரும் வித்தியாசம் இல்லை. ஜப்பானில் எமது குடும்பத்தினர் என்னைக் கவனித்தனர். இங்கு எமது சக பணியாளர்கள் என்னுடன் நன்றாக பழகுகின்றனர். அவர்கள், எனது குடும்பத்தினரைப் போல் என்னைக் கவனிக்கின்றனர்" என்றார், அவர்.

தற்போது தமது வாழ்க்கை மற்றும் பணி பற்றி Kobori Shogo மனநிறைவு அடைகின்றார். அடுத்த ஆண்டு தமது இரண்டு விருப்பங்கள் நனவாக்கப்படும் என்று அவர் எதிர்பார்க்கின்றார். தொழில் நிறுவனத்தின் நிர்வாகியாக, இனிமேல் இந்நிறுவனம் மென்மேலும் சீராக வளர்ச்சியடைய வேண்டும் என்று அவர் விரும்புகின்றார். இது அவரது முதலாவது விருப்பம். அவர் கூறியதாவது:

"2000ஆம் ஆண்டு மே திங்கள் Little Giant இயந்திரக் கருவி தொழில் நிறுவனம் நிறுவப்பட்டது முதல் வேகமாக வளர்ந்து வந்துள்ளது. தற்போது, வெளிநாடுகளிலான Yamazaki Mazak கூட்டு நிறுவனத்தின் தொழிற்சாலைகளில், Little Giant இயந்திரக் கருவி தொழில் நிறுவனத்தின் வளர்ச்சி மிக விரைவானது. சீனாவின் Yin Chuanவில் உள்ள இத்தொழிற்சாலையில், உலகில் மிக முன்னேறிய இயந்திரக் கருவி தயாரிக்கப்படும் என்பது எனது ஒரு கனவு"என்றார், அவர்.

அவரது இன்னொரு விருப்பம் என்ன? இனி, சீனாவுக்கும் ஜப்பானுக்குமிடையே நட்பார்ந்த பரிமாற்றம் மேலும் அதிகமாக தங்கு தடையின்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும், விசாவுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட வர வேண்டும் என்பதும் அவரது மற்றொரு விருப்பமாகும். அவர் கூறியதாவது:

"பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி நடைபெறும் போது, விசா பிரச்சினையில் முன்னேற்றம் காணப்படும் என்று நினைக்கின்றேன். 2006ஆம் ஆண்டு வரை, ஜப்பான் நாட்டவர்கள் சீனாவுக்கு வந்த போது விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் 2007ஆம் ஆண்டு, ஷாங்காய், குவாங்சோ முதலிய நகரங்களுக்கு வந்தால், விசாவுக்கு விண்ணப்பம் செய்ய தேவையில்லை. சீனாவுக்கும் ஜப்பானுக்குமிடை பொருளாதார உறவு மேலும் ஆழமாகுவதுடன், பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கிடை தொடர்பு மேலும் தங்கு தடையின்றி வளரும் என்று நம்புகின்றேன்" என்றார், அவர்.