• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-30 08:25:06    
தமிழ் மூலம் சீனம் பாடம் 127

cri
வாணி – கடந்த வகுப்பில் தொலைபேசி செய்தல் பற்றி சில வாக்கியங்களைக் கற்றுக்கொண்டோம். இன்று முதலில் இவற்றை மீளாய்வு செய்கின்றோம்.

முதலாவது வாக்கியம். 我想打个电话。wo xiang da ge dian hua. நான் தொலைபேசி செய்ய வேண்டும்.

想 xiang, விரும்புதல், 打个电话 என்பது 打一个电话 என்பதற்கு சமம். அதாவது, ஒரு தொலைபேசி செய்வது என்ற பொருள். 我想打个电话。wo xiang da ge dian hua.

க்ளீட்டஸ் -- 想 xiang, விரும்புதல், 我想打个电话。wo xiang da ge dian hua. நான் தொலைபேசி செய்ய வேண்டும்.

வாணி -- 2வது வாக்கியம். 请你给我打电话,qing ni gei wo da dian hua. தயவு செய்து, என்னை தொலைபேசி மூலம் அழைக்கவும் அல்லது எனக்கு போன் செய்யுங்கள். 给我,gei wo, எனக்கு என்ற பொருள். 请你给我打电话,qing ni gei wo da dian hua.

க்ளீட்டஸ் -- 请你给我打电话,qing ni gei wo da dian hua. தயவு செய்து, தொலைபேசி மூலம் என்னை அழைக்கவும்.

வாணி -- மூன்றாவது வாக்கியம். 我昨天给你打过电话,你不在。zuo tian wo gei ni da guo dian hua, ni bu zai. நேற்று தொலைபேசி மூலம் உங்களை அழைத்தேன். ஆனால், அப்போது நீங்கள் அங்கே இல்லை. 昨天,zuo tian, நேற்று. 过,guo என்பது செயல் முடிந்ததைக் குறிக்க வினைச்சொல்லுக்குப் பிறகு பயன்படுத்தப்படும் சொல். எடுத்துக்காட்டாக, 我吃过了。நான் சாப்பிட்டுவிட்டேன்

க்ளீட்டஸ் -- 我吃过了。wo chi guo le. நான் சாப்பிட்டுவிட்டேன்.

வாணி -- 我买过这本书。wo mai guo zhe ben shu. இந்தப் புத்தகத்தை வாங்கியுள்ளேன்.

க்ளீட்டஸ் -- 我买过这本书。wo mai guo zhe ben shu. இந்தப் புத்தகத்தை வாங்கியுள்ளேன். 过,guo என்பது எப்போதும் வினைச்சொல்லுக்குப் பிறகு பயன்படுத்தப்படுகின்றது.

வாணி -- 我昨天给你打过电话,你不在。zuo tian wo gei ni da guo dian hua, ni bu zai.

க்ளீட்டஸ் -- 我昨天给你打过电话,你不在。zuo tian wo gei ni da guo dian hua, ni bu zai. நேற்று தொலைபேசி மூலம் உங்களை அழைத்தேன். அப்போது நீங்கள் அங்கே இல்லை.

வாணி -- அடுத்து, சில சொற்கள், 内线电话 (interphone),nei xian dian hua. உட்புற தொலைபேசி. 内线电话, nei xian dian hua.

க்ளீட்டஸ் -- 内线电话 (interphone),nei xian dian hua. உட்புற தொலைபேசி.

வாணி -- 分机号码(extension number)。fen ji hao ma. விரிவாக்க எண். 分机号码, fen ji hao ma.

க்ளீட்டஸ் -- 分机号码(extension number)。fen ji hao ma. விரிவாக்க எண்.

வாணி -- 拨号,bo hao。இங்கே hao என்பது 号码 இன் சுருக்கம். அதாவது எண் என்ற பொருள். 拨号,bo hao。எண்ணைப் பயன்படுத்துவது. 拨号,bo hao。

க்ளீட்டஸ் -- 拨号,bo hao。எண்ணைப் எண்ணைப் பயன்படுத்துவது.

வாணி -- இந்த 3 சொற்களுடன் ஒரு புதிய வாக்கியத்தைக் கற்றுக்கொண்டோம். 打内线电话,请直播分机号。da nei xian dian hua, qing zhi bo fen ji hao. உட்புற தொலைபேசி செய்தால், நேரடியாக விரிவாக்க எண்ணைப் பயன்படுத்துங்கள். இந்த வாக்கியம் ஹோட்டலின் தொலைபேசி வசதியில் அடிக்கடி கேட்கப்படலாம். 打内线电话,请直播分机号。da nei xian dian hua, qing zhi bo fen ji hao.

க்ளீட்டஸ் -- 打内线电话,请直播分机号。da nei xian dian hua, qing zhi bo fen ji hao. உட்புற தொலைபேசி செய்தால், நேரடியாக விரிவாக்க எண்ணை பயன்படுத்துங்கள்.

இசை

வாணி – புதிய வகுப்பைத் துவக்கலாம். முதலாவது வாக்கியம். 对不起,我能用一下电话吗?dui bu qi, wo neng yong yi xia dian hua ma ? தயவு செய்து, நான் தொலைபேசியைப் பயன்படுத்த முடியுமா? 用一下电话, தொலைபேசியைப் பயன்படுத்துதல். 对不起,我能用一下电话吗?dui bu qi, wo neng yong yi xia dian hua ma ?

க்ளீட்டஸ் --对不起,我能用一下电话吗?dui bu qi, wo neng yong yi xia dian hua ma ? தயவு செய்து, நான் தொலைபேசியைப் பயன்படுத்த முடியுமா?

வாணி -- 对不起,我能用一下电话吗?dui bu qi, wo neng yong yi xia dian hua ma ?

க்ளீட்டஸ் --对不起,我能用一下电话吗?dui bu qi, wo neng yong yi xia dian hua ma ? தயவு செய்து, நான் தொலைபேசியைப் பயன்படுத்த முடியுமா?

வாணி – 你打内线还是外线? Ni da nei xian hai shi wai xian? உட்புற தொலைபேசியா, வெளிப்புற தொலைபேசியா? 内线, உட்புற தொலைபேசி, 外线, வெளிப்புற தொலைபேசி. 你打内线还是外线? Ni da nei xian hai shi wai xian?

க்ளீட்டஸ் -- 你打内线还是外线? Ni da nei xian hai shi wai xian? உட்புற தொலைபேசியா, வெளிப்புற தொலைபேசியா?

வாணி --你打内线还是外线? Ni da nei xian hai shi wai xian?

க்ளீட்டஸ் -- 你打内线还是外线? Ni da nei xian hai shi wai xian? உட்புற தொலைபேசியா, வெளிப்புற தொலைபேசியா?

வாணி -- 外线, wai xian. வெளிப்புற தொலைபேசி.

க்ளீட்டஸ் --外线,wai xian. வெளிப்புற தொலைபேசி.

வாணி – 打外线,请先拨零。da wai xian, qing xian bo ling. வெளிப்புறத் தொலைபேசி செய்யும் போது, முதலில் பூஜியம் போடுங்கள். 打外线,请先拨零。da wai xian, qing xian bo ling.

க்ளீட்டஸ் --打外线,请先拨零。da wai xian, qing xian bo ling. வெளிப்புறத் தொலைபேசி செய்யும் போது, முதலில் பூஜியம் போடுங்கள்.

வாணி – மீண்டும் ஒரு முறை. 打外线,请先拨零。da wai xian, qing xian bo ling.

க்ளீட்டஸ் --打外线,请先拨零。da wai xian, qing xian bo ling. வெளிப்புறத் தொலைபேசி செய்யும் போது, முதலில் பூஜியம் போடுங்கள்.

வாணி – 电话占线。Dian hua zhan xian. எண் பயனில் உள்ளது அல்லது தொலைபேசி பயன்படுத்தப்படுகின்றது. 电话占线。Dian hua zhan xian.

க்ளீட்டஸ் -- 电话占线。Dian hua zhan xian. எண் பயனில் உள்ளது அல்லது தொலைபேசி பயன்படுத்தப்படுகின்றது.

வாணி – 电话占线。Dian hua zhan xian.

க்ளீட்டஸ் -- 电话占线。Dian hua zhan xian. எண் பயனில் உள்ளது அல்லது தொலைபேசி பயன்படுத்தப்படுகின்றது.

வாணி – 请稍后再拨。qing shao hou zai bo. சற்று நேரத்துக்குப் பின் மீண்டும் செய்யுங்கள். 稍后,shao hou, சற்று நேரத்துக்குப் பின் என்ற பொருள். 再zai, மீண்டும். இந்த வாக்கியத்தில்,拨,bo என்பது 拨号என்பதன் சுருக்கமாகும். அதாவது, எண்ணை முயற்சி செய்வது என்ற பொருள்.

க்ளீட்டஸ் --稍后,shao hou, சற்று நேரத்துக்குப் பின் என்ற பொருள். 再zai, மீண்டும். 拨号, bo hao, எண்ணை முயற்சி செய்வது என்ற பொருள்.

வாணி -- இவற்றைச் சேர்த்து, 请稍后再拨。qing shao hou zai bo. சற்று நேரத்துக்குப் பின் மீண்டும் செய்யுங்கள். 请稍后再拨。qing shao hou zai bo.

க்ளீட்டஸ் --请稍后再拨。qing shao hou zai bo. சற்று நேரத்துக்குப் பின் மீண்டும் செய்யுங்கள்.

வாணி --请稍后再拨。qing shao hou zai bo.

க்ளீட்டஸ் --请稍后再拨。qing shao hou zai bo. சற்று நேரத்துக்குப் பின் மீண்டும் செய்யுங்கள்.