ஐரோப்பிய விருந்தினரை சந்திப்பு
cri
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் வெளிநாட்டு தொடர்பு துறை அமைச்சர் வாங் சியா ரெய் இன்று பெய்ஜிங்கில் கட்சிப் பிரதிநிதிக் குழுத் தலைவர் ஜோசப் தாவுல் தலைமையிலான ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் மக்கள் கட்சிப் பிரதிநிதிக் குழுவை சந்தித்துரையாடினார். சீன ஐரோப்பிய பன்முக உத்திப்பூர்வ கூட்டாளி உறவு முக்கியத்துவம் வாய்ந்தது. கட்சிகளுக்கிடையிலான பரிமாற்றம் சீன ஐரோப்பிய அரசியல் உறவின் முக்கிய பகுதியாகும். இருதரப்பும் ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து புரிந்துணர்வை ஆழமாக்கும் அடிப்படையில் பொது கருத்தை அதிகரிக்க வேண்டும். கூட்டு முயற்சிகள் மூலம் இருதரப்புறவை நிதானமாக மேலும் உயர் நிலையை நோக்கி முன்னேற்ற வேண்டும் என்று சந்திப்பில் வாங் சியா ரெய் தெரிவித்தார். தவிரவும் திபெத் மற்றும் தைவான் பிரச்சினைகள் பற்றிய சீன தரப்பின் கோட்பாட்டு நிலைப்பாட்டை அவர் விவரித்தார். பொது அக்கறை கொண்ட பிரதேச மற்றும் சர்வதேச பிரச்சினைகள் பற்றி அவர்கள் கருத்துக்களை பரிமாறி கொண்டனர். ஐரோப்பாவும் சீனாவும் பரந்தளவில் ஒத்துழைப்பை மேற்கொள்ளலாம் என்று தோல் மிகுந்த விருப்பம் தெரிவித்தார். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு இனிதே நடைபெற வேண்டும் என்று அவர் வாழ்த்தினார்.
|
|