• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-29 16:58:41    
லாசாவிலான வன்முறை சம்பவம்

cri

லாசா நகரில் மார்ச் 14ம் வன்முறைச் சம்பவத்தில் பங்கேற்ற சில ஐயத்துக்குரிய குற்றவாளிகள், சீனாவின் காவற்துறையின் அறிவுரைகளைப் பெற்ற பின், தமது குற்ற நடவடிக்கைகளை ஆழமாக அறிந்துகொண்டுள்ளனர். அவர்கள் தங்களது செயல்களுக்கு வருத்தம் தெரிவித்து தற்சோதனை செய்ய வேண்டும். அண்மையில், ஐயத்துக்குரிய குற்றவாளிகள் tashi dorje, kongsang lhamo இருவரும் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர்.

 
tashi dorje, xigaze பிரதேசத்தில் வாழ்கிறார். லாசா நகரத்தில் சரக்குப் போக்குவரத்தில் ஈடுபடுகிறார். மார்ச் திங்கள் 14ம் நாள் பிற்பகல், ramoche கோயிலுக்கு அருகே சென்ற போது, சிலர் அவரை கத்தியை காட்டி அச்சுறுத்தியதால், இவ்வன்முறை நடவடிக்கையில் அவரும் கலந்துகொண்டார்.

 
இந்த வன்முறைச் சம்பவம், நாட்டுக்கு மாபெரும் பொருளாதாரச் சீர்குலைவுகளைக் கொண்டு வந்துள்ளது. தேசிய இனங்களின் ஒற்றுமைக்குத் தீங்கு விளைவித்துள்ளது என்று அவர் புரிந்துகொண்டுள்ளார்.

 
kongsang lhamo, லாசா நகரத்தின் qushui மாவட்டத்தில் வாழ்கிறார். இளையோர் இடைநிலைப்பள்ளியின் பட்டதாரியாக இருக்கிறார். அவரின் பள்ளியுடன் தொடர்பான செலவுகள் சீன அரசால் வழங்கப்பட்டவை. இவ்வாண்டின் வசந்த விழாவுக்கு முன், விவசாயிகள், ஆயர்கள் ஆகியோரின் குடியிருப்பு இடங்களை உருவாக்கும் திட்டப்பணி வழங்கும் புதிய வீட்டுக்கு அவரின் குடும்பம் இடம்பெயர்ந்துள்ளது. அவர் மார்ச் 14ம் வன்முறைச் சம்பவத்தில் கலந்துகொண்டது குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார். அறியாமையால், கெட்டவர்களின் தவறான அறிவுரைகளைப் பின்பற்றி, உண்மையைப் புரியாத நிலைமையில் இவ்வன்முறைச் சம்பவத்தில் அவர் பங்கெடுத்தார். அண்மையில் சொந்த தவற்றை உணர்ந்துகொண்டு, தமது செயல்களுக்கு மிகுந்த வருத்தம் தெரிவித்து, தவற்றை உடனடியாகத் திருத்த வேண்டும் என்று kongsang lhamo கூறினார்.