• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-29 09:34:11    
ஒரு வகை சுவையான இனிப்பு வறுவல்

cri

வாணி -- இன்று க்ளீட்டஸ், வாணி இருவரும் தங்களுக்கு இன்னொரு சுவையான சீன உணவு வகையை அறிமுகப்படுத்துகின்றோம்.
க்ளீட்டஸ் – சுவையான உணவு வகையைச் சாப்பிட்டு, நன்றாக உடல் பயிற்சி செய்து, உடல் நலனைப் பேணிக்காப்பது ஒவ்வொருவரின் இலக்காக மாற வேண்டும். வாணி, இன்று எந்த வகை உணவு பற்றி கூறுகின்றோம்?
வாணி – ஒரு வகை சுவையான இனிப்பு வறுவல் பற்றி கூறுகின்றோம். பயறு, வெண்ணெய் முதலியவை இடம்பெறும் இது மிகவும் சுவையானது, உடலுக்கு நன்மை பயக்கும்.
க்ளீட்டஸ் – சரி, தேவையான பொருட்களை நேயர்களிடம் தெரிவிக்கலோமே.
வாணி – கண்டிப்பாக.
முதலில், கொழுப்பு அகற்றப்பட்ட வெண்ணெய் 50 கிராம்
2 முட்டைகளின் வெள்ளைக் கரு
எலுமிச்சை பழம் 1
உப்பு தேவையான அளவு சர்க்கரை 40 கிராம்
கோதுமை மாவு 200 கிராம்
பயறு 40 கிராம்
மேலும் இன்றைய உணவு வகையின் தயாரிப்புக்கு ஒரு நுண்ணலை அடுப்பு தேவைப்படுகிறது.
வாணி – முதலில், பயிறுகளைச் சுத்தம் செய்து, வாணலியில் போட்டு, 10 கிராம் சர்க்கரை, தண்ணீர் ஆகியவற்றை சேர்க்கவும். சாதாண அடுப்பில் வைத்து பயறுகளை நன்றாக வேகவிடுங்கள். பிறகு அவற்றை தண்ணீரிருந்து வெளியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.


க்ளீட்டஸ் – கொழுப்பு அகற்றப்பட்ட 50 கிராம் வெண்ணெயை மெல்லிய நூல்போல நறுக்கி கொள்ளவும். எலுமிச்சை பழ சாற்றை 2 முட்டைகளின் வெள்ளைக் கருவில் கலைந்து நுரை தோன்றும் அளவாக நன்றாக அடித்து ஆற்றி வையுங்கள்.
வாணி – பிறகு, இதில் சிறிதளவு உப்பையும், எஞ்சிய சர்க்கரையையும் ஒவ்வொன்றாக முட்டை வெள்ளை பகுதியில் சேர்த்து, தொடர்ந்து ஆற்ற வேண்டும். சிறிய நுரைகள் காணப்படும் வரை அவற்றை செய்யலாம்.
க்ளீட்டஸ் – வேகவைக்கப்பட்ட பயறை, கோதுமை மாவுடன் கலந்து, முட்டை- எலுமிச்சை பழ கலவையை அதில் படிப்படியாக ஊற்றலாம். ஊற்றும் போது மெதுவாக அதை கிளற வேண்டும். வெண்ணெய் துண்டுகளையும் சேர்க்கவும்.
வாணி – பின்னர் இந்த கலவையை கோப்பை வடிவ தாளில் ஊற்றவும். நுண்ணலை அடுப்பை இயங்க செய்து 160 சென்டி கிரேடில் வைத்து கொள்ளுங்கள். கோப்பை வடிவ தாட்களிலான மாவு கலவையை அதில் வைத்து, 160 சென்டிகிரேட் வெப்பத்துடன் 25 நிமிடங்கள் வேக வையுங்கள்.
க்ளீட்டஸ் – 25 நிமிடங்களுக்கு பின் இன்றைய பயறு வெண்ணெய் இனிப்பு தயார். 

வாணி – க்ளீட்டஸ், இந்தியாவில் பால் மற்றும் வெண்ணெய் உற்பத்தி வகைகள் அதிகம், அல்லவா?
க்ளீட்டஸ் – ஆமாம், மக்கள் இவைகளை அதிகமாகச் சாப்பிட விரும்புகின்றனர்.
வாணி – பால், வெண்ணெய் சுவையை விரும்பும் நேயர்கள், இன்றைய உணவு வகையில் மேலும் அதிகமான வெண்ணெயை பயன்படுத்தலாம். கொழுப்பு அகற்றப்பட்டுள்ளதால் இது உங்கள் உடல் நலனுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாது.
க்ளீட்டஸ் – மேலும் ஒரு குறிப்பு. வெண்ணெயை மாவு கலவையில் சேர்க்கும் போது, மிக மெதுவாக கிளற வேண்டும்.