• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-29 09:36:45    
தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி பற்றிய கருத்து

cri

கலை: நேயர் நேரம் நிகழ்ச்சியில் மீண்டும் உங்கள் அனைவரோடும் இணைவதில் மகிழ்ச்சியடைகிறோம். தொடரும் உங்கள் கடித, மின்னஞ்சல் ஆதரவுக்கு நன்றி கூறி நிகழ்ச்சி செல்கிறோம்.
க்ளீட்டஸ்: குருணிகுளத்துப்பட்டி சொ. முருகன் எழுதிய கடிதம். சீன வரலாற்றுச் சுவடுகள் நிகழ்ச்சியில் தேன்மொழி வழங்கிய தகவல்களை கேட்டேன். சீன வரலாற்றை தெளிவாக தொகுத்து கடந்த காலங்களில் நிகழ்ந்தவற்றை அறிய செய்கிறது. சீன வானொலியின் இந்த படைப்பு வரலாற்று மாணவர்களுக்கும். பொது அறிவில் ஆர்வமுள்ளவர்களுக்கும் ஒரு அரிய நிகழ்ச்சியாகும். வீடு தேடி வரும் வரலாற்று சுவடுகள் நிகழ்ச்சி வரவேற்கத்தக்கது.
கலை: அடுத்து சென்னை எஸ். ரேணுகாதேவி எழுதிய கடிதம். அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் உரிமை போராட்டம் என்ற தலைப்பில் காப்புரிமை பற்றி வழங்கக் கேட்டேன். "ஊரான் ஊரான் தோட்டத்திலே ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா, காசுக்கு ரெண்டு விக்க சொல்லி காகிதம் போட்டானாம் வெள்ளக்காரன்" என்ற பாடலின் மூலம், காப்பீட்டின் தேவையை அறிய முடிந்தது.


க்ளீட்டஸ்: தொடர்ந்து நீலகிரி கீழ்குந்தா கே. கே. போஜன் எழுதிய கடிதம். அரசாங்கம் சுகாதாரத்திற்காக எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டாலும் நீர்த்தேக்கங்கள், கால்வாய்களில் உள்ள நீரில் உற்பத்தியாகும் கொசுக்களின் மூலம் பரவும் நோய்கள் பற்றி அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் அறிய முடிந்தது. அசுர வேகத்தில் இனப்பெருக்கம் செய்யும் கொசுக்கள் நமது நரம்பு, மூட்டு, தோல் ஆகியவற்றை பாதிக்கும் நோய்களுக்கு உடந்தையாக இருப்பதை அறிந்தோம். முன்பெல்லாம் இத்தகைய நோய் யாருக்காவது ஏற்பட்டால் ஊரில் உள்ள மற்றவர்கள் ஊரையே காலி செய்துவிட்டு வேறு ஊருக்கு சென்று விடுவார்கள் என்று கேள்விபட்டதுண்டு. ஆனால் அறிவியல் முன்னேறிய இக்காலத்திலும் ஏதாவது ஒரு நோய் தோன்றி மிரட்டிக்கொண்டுதான் இருக்கிறது என்பது உண்மையே.


கலை: அடுத்து இலங்கை மஞ்ஞத்தொடுவாய் எம். என். எஃப். நிப்ரா எழுதிய கடிதம். சீன வானொலியின் நிகழ்ச்சிகளை தவறாமல் கேட்டு வருகிறேன். சீன வரலாற்றுச் சுவடுகள், மக்கள் சீனம், சீனப் பண்பாடு, தமிழ் மூலம் சீனம், நலவாழ்வு பாதுகாப்பு, சீன உணவு அரங்கம் ஆகிய நிகழ்ச்சிகளை விரும்பி கேட்டு வருகிறேன். சீன மொழியில் பேசவேண்டும் என்பது எனது ஆசை. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் மலர்ச்சோலை நிகழ்ச்சி எனக்கு மிக மிக பிடித்தமான நிகழ்ச்சியாகும்.
க்ளீட்டஸ்: அடுத்து கோவை மாவட்ட தலைமை சீன வானொலி நேயர் மன்றத்தினர் பிப்ரவரி 24ம் நாண் நடத்திய கலந்தாய்வுக் கூட்டம் பற்றி தென்பொன்முடி தெ. நா. மணிகண்டன் எழுதிய கடிதம். நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியதை விரிவாக எழுதியுள்ளார் மணிகண்டன். கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களை இப்பொது வாசிக்கிறேன். சீனாவில் கடும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுதாபமும், வருத்தமும் தெரிவிக்கப்பட்டது. 45 ஆண்டு ஒலிபரப்பு பணியின் வெற்றிக்கும், வசந்தவிழாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. பெய்சிங் ஒலிம்பிக் போட்டி சிறப்பாக நடைபெற்று வெற்றி பெற வாழ்த்துக்கள் கூறப்பட்டது.
கலை: தொடர்ந்து மக்கள் சீனம் நிகழ்ச்சி பற்றி மீனாட்சிப்பாளையம் கா. அருண் எழுதிய கடிதம். ஜிலின் நகர வளர்ச்சி பற்றி அறிய தந்ததை கேட்டு மகிழ்ந்தேன். புதியவராக நிகழ்ச்சியில் பங்கேற்றாலும், சிறப்பாக வாசித்தார் அறிவிப்பாளர் ஈஸ்வரி. பாராட்டுக்கள்.


மின்னஞ்சல் பகுதி
……திருப்பூர் இரா.சின்ன‌ப்ப‌ன்……
24.03.08 காலை "நேயர்விருப்பம்" நிகழ்ச்சி கேட்டேன். நமது நேயரின் திருமணநாள் வாழ்த்து கூறி "கடவுள் நினைத்தான் மணநாள் அமைத்தான்" என்ற பாடலை வழங்கியது சிறப்பாக இருந்தது. தற்போது நேயர்களின் பிறந்தநாள் மற்றும் திருமணநாள் வாழ்த்துக்கள் கூறி அதற்கு ஏற்றார்போல் திரைப்பாடல்கள் வழங்குவது நிகழ்ச்சிக்கு மெருகூட்டுவதாக அமைந்துள்ளது.
முனுகப்பட்டு, பி. கண்ணன் சேகர்
திபெத்தில் நடைபெற்ற வன்முறைகள் பற்றிய புகைப்படங்களுடன் கூடிய செய்திகளை சீன வானொலியின் அனைத்து மொழிப்பிரிவுகளும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளதை பார்த்து, பல்வேறு நாடுகளின் நேயர்கள், தங்களின் கன்டனக் கருத்தையும், சீனாவுக்கான ஆதரவையும் வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது. "பழுத்த மரத்தில்தான் கல்லடி படும்" என்பது பழமொழி. இதுபோல் சீனஅரசு அமைதியான வளர்ச்சியை மக்களுக்கு வழங்கி வரும் சூழலில், தலாய்லாமாக் குழுவினர் பொய்ப் பிரச்சாரத்தால் திபெத்தின் சீரான வாழ்வை சீர்குலைக்க நினைப்பது தவறான எண்ணமாகும். இந்த போராட்டத்தில் சீனாவும், திபெத் உள்ளுர் நிர்வாகமும் நிச்சயம் வெற்றி பெறும்.


…….பாண்டிச்சேரி என்.பாலகுமார்…….
14-04-2008 தமிழ் புத்தாண்டடை முன்னிட்டு நண்பர்.க.அருண் வழங்கிய சிறப்பு நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது. இதுவரை நேயர்கள் தயாரித்த நிகழ்ச்சிகளில், சீன வானொலி வளர்ச்சிக்கும், நேயர்கள் எப்படி சிறந்த நேயராக விளங்க முடியும் என்ற அறிவுரைகள் வழங்கும் நிகழ்ச்சிகளும், நேயர்கள் திறமையை வெளிக்காட்டும் கவிதை, கட்டுரை போன்றவை தான் இடம்பெற்றன. ஆனால் இந்த சிறப்பு நிகழ்ச்சி சீன வானொலி நிகழ்ச்சிகளில் ஒரு சிறப்பான நிகழ்ச்சியாகவும், தரமான நிகழ்ச்சியாகவும் முத்திரை பதித்துவிட்ட்து. நண்பர் க.அருண் அவர்களை எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.


.....யாழ்ப்பாணம் ஈசன்..... "ஒலிம்பிக் விளையாட்டுச் செய்திகள்" பகுதியில், பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் பற்றி நிறைய செய்திகள் இடம்பெற்றன. இத்தீபத் தொடரோட்டத்தில் பங்கேற்பவர்களின் கருத்துக்களும் இடம்பெற்றன.
24ஆவது தடவையாக பங்கேற்கும் Alexander என்பவரின் கருத்தும், முதல் முறையாக பங்கேற்பவர்களின் கருத்துக்களும் இடம் பெற்றன.
சீன வானொலி பல்வேறு மொழிப்பிரிவுகளைக் கொண்டு இயங்கினாலும், தமிழ்ப்பிரிவு மிகப்பல நேயர்களைக் கொண்டு சிறப்பாகச் செயல்படுவது பாராட்டுக்குரியது. நேயர்களின் கடிதங்களுக்கு, தனித்தனியாக பதிலளிப்பது நேயர்களை உற்சாகப் படுத்துகிறது.
மதுரை 20, N. இராமசாமி
தற்பொழுது திபெத் தனது வரலாற்றில் மிக நல்ல வளர்ச்சியை அடைந்துள்ளது என்பது
கண்கூடு. புள்ளி விவரங்களின்படி கடந்த 7ஆண்டுகளில் திபெத்தின் பொருளாதாரம் 12விழுக்காடு வேகத்தில் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. தலாய்லாமாவின் கூற்று
பொய்யானது, உண்மைக்கு புறம்பானது. திபெத்தின் இயற்கை அழகு, பண்பாடு ஆகியவை சுற்றுலா பயணிகளை ஈர்க்கவல்லது என்பது குறிப்பிடத்தக்கது.


……விழுப்புரம் எஸ்.பாண்டியராஜன்……
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கூட்டம் ஏப்ரல் 1 முதல் 3ம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் சீன உள்நாட்டு பிரச்சனையை சர்வதேச பிரச்னை போல கொண்டு அநேக நாடுகள் ஒலிம்பிக்கை புறக்கணிப்போம் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. 2008ல் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை நடத்த சீனாவுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அனுமதி அளித்தது. ஒலிம்பிக்கை புறக்கணிப்போம் என்று எத்தனை நாடுகள் கூறினாலும் சீனா அதுபற்றி கவலைப்படாமல் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கை நடத்த வேண்டும். 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கை புறக்கணிப்பவர்களை நாம் புறக்கணிப்போம்.