• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-30 08:33:24    
பெய்சிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நகரான சியோல்

cri
தென் கொரியாவின் தலைநகரான சியோல், அதன் அரசியல், பொருளாதாரம், கல்வி மற்றும் பண்பாட்டு மையமாகும். அத்துடன், நாட்டு தரை, கடல் மற்றும் வான் போக்குவரத்து கேந்திரமும் ஆகும். இது, கொரிய தீபகற்பத்தின் மத்திய பகுதிலில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 605 சதுர கிலோமீட்டராகும். அந்நகரின் மக்கள் தொகை 97 இலட்சத்து 96 ஆயிரம் ஆகும்.
20வது நூற்றாண்டின் 60ம் ஆண்டு முதல், சியோலின் பொருளாதாரம் உயர்வேக

வளர்ச்சியைப் பெற்றது. 60ம் ஆண்டுகளின் துவக்கத்தில், தென் கொரியா, வெளிநாட்டு ஏற்றுமதிக்கான உற்பத்தி பொருட்களை மையப்படுத்திய பொருளாதார வளர்ச்சி திட்டத்தை நடைமுறைப்படுத்தி, மாபெரும் தொழில் நிறுவனங்களுக்கு உதவியறித்து, ஏற்றுமதி மற்றும் உற்பத்திபதனீட்டு தொழிற்துறையைப் பெரிதும் வளர்த்து, பொருளாதார உயர்வேக வளர்ச்சியை நனவாக்கியது. தவிர, சியோல் அதன் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை பெரிதும் வலுப்படுத்தியது.
1988ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டியைச் சியோல் வெற்றிகரமாக

நடத்தியது. முந்திய ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில், தென் கொரிய பிரதிநிதிக் குழு சிறந்த சாதனையை பெற்றுள்ளது.
2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் புனிதத் தீபம், 27ம் நாள் சியோல் சென்றடைந்தது.
சீன-ஆசியான் வானொலி மற்றும் தொலைக்காட்சி உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட ஆசியான் நாடுகளின் பிரதிநிதிகள் 23ம் நாள் 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் சில திடல்களையும் அரங்குகளையும் பார்வையிட்டனர். விருந்தினர்கள், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான முன்னேற்பாட்டுப்

பணிகளை உயர்வாக பாராட்டியதோடு, இப்போட்டி வெற்றி பெற நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். தவிர, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைப் பயன்படுத்தி தங்களது அரசியல் நோக்கத்தை எட்ட முயன்லும் நடவடிக்கைகளுக்கு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
ஆசியான் நாடுகளின் அரசு, வானொலி மற்றும் தொலைகாட்சி வட்டார செய்தி ஊடகங்களின் உயர் நிலை பிரதிநிதிகள், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முக்கிய விளையாட்டரங்கான தேசிய விளையாட்டரங்கு, தேசிய நீச்சல் மையம் முதலியவற்றைப் பார்வையிட்டனர். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் திடல்களும் அரங்குகளும் தாம் கண்ட மிக அழகான

விளையாட்டுத்திடல்களும் மற்றும் அரங்குகளுமாகும் என்று லாவோஸ் தேசிய வானொலி நிலையத்தின் இயக்குனர் Sypha Nonglath கூறினார். அவர் கூறியதாவது:
நாங்கள், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் விளையாட்டுத்திடல்களையும் அரங்குகளையும் பார்வையிட்ட போது, பல தொழிலாளர்கள் ஒலிம்பிக் திடல்களையும் அரங்குகளையும் கட்டியமைக்க பாடுபட்டு உழைப்பதை பார்த்தோம். அவர்கள் கட்டுகின்றவை அழகான விளையாட்டுத்திடல்கள் மற்றும் அரங்குகளாகும். இந்த

ஆயத்தப் பணிகள் கடினமானவை. அது தடையின்றி நடைபெற்ற, வெற்றி பெறுவதற்கு நான் இதயபூர்வமாக வாழ்த்துகிறேன் என்றார் அவர்.
இம்மாநாட்டில் கலந்துகொண்ட வியட்நாம் வானொலி நிலையத்தின் வெளி நாட்டு மையத்தின் துணைத் தலைவர் Thi Thuy Lan அம்மையார் பலமுறை சீனாவுக்கு வந்திருந்தவர்களில் ஒரு வராவார். ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான ஆயத்த பணிகள், பெய்சிங்கில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, அவர் இவ்வாறு கூறினார். அவர் கூறியதாவது: