• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-30 08:33:16    
பேய் வீடு

cri

வெய் என்ற இடத்தில் வாழ்ந்துவந்த ஷாங் ஃபென் ஒரு பெரும் பணக்காரர். செல்வந்தராக இருந்த ஷாங் ஃபெனுக்கு திடீரென ஏற்பட்ட சோதனையாக, சரிவாக கொஞ்சம் கொஞ்சமாக தனது செல்வங்களை இழக்கத் தொடங்கினார். இறுதியில் தனது வீட்டையும் விற்கும் நிலை அவருக்கு ஏற்பட்டது. லியாங்கைச் சேர்ந்த செங் குடும்பத்தினருக்கு தனது வீட்டை விற்றார் ஷாங் ஃபென். வீட்டை வாங்கிய செங் குடும்பத்தினர் அதில் குடியேறத் தொடங்கியதும் பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டது. குடும்பத்தினர் ஒவ்வொருவராக நோய்வாய்ப்பட்டனர். நோய் நீங்காமலேயே இறந்தும் போயினர். எஞ்சியவர்களை காப்பாற்றும் நோக்கில், அதிர்ஷ்டமில்லாத இந்த வீட்டை விற்றுவிட முடிவு செய்தது செங் குடும்பம். யெ என்ற இடத்தைச் சேர்ந்த ஹெ வென் என்பவருக்கு வீட்டை விற்றனர் செங் குடும்பத்தினர்.


வீட்டை வாங்கிய ஹெ வென் ஒரு நாள் பொழுது சாய்ந்ததும் வீட்டின் வரவேற்பறையில் மேலே உத்தரத்தில் கையில் வாளேந்தபடி அமர்ந்திருந்தான். தெற்கு நோக்கி அவன் விழிப்புடன் அமர்ந்திருந்தபோது 10 அடி உயரத்தில் ஒரு உருவம் நீண்ட தொப்பியும், மஞ்சள் நிற ஆடையும் அணிந்தபடி வீட்டிற்குள் நுழைந்தது. ஆவி போன்ற அவ்வுருவம் ஹெ வென்னை பார்த்து, குறுகிய இடுப்புடையவனே, நான் உயிருள்ள மனிதனின் வாசனையை உணரக் காரணமென்ன? என்று கேட்டது. அதற்கு ஹென் வென் "அப்படி யாரும் இங்கில்லையே" என்றான்.
பின்மீண்டும் ஒரு நீண்ட தொப்பியணிந்த பச்சை நிற ஆடையுடுத்திய உருவம் வீட்டில் நுழைந்தது. அதையடுத்து நீண்ட தொப்பியும் வெண்ணிற ஆடையும் அணிந்த ஒரு உருவம் நுழைந்தது. இரண்டுமே முதல் ஆவி கேட்ட அதே கேள்வியைக் கேட்டன, ஹெ வென் இரண்டுக்கும் முதலில் சொன்னதுபோலவே பதிலளித்தான்.
விடியலுக்கு சற்று நேரம் இருக்கையில் உத்திரத்திலிருந்து கீழே இறங்கிய ஹெ வென், ஆவிகள் கேட்ட கேள்வியை, ஆவிகளிடமே கேட்டான்.


குறுகிய இடுப்புடையவனே, மஞ்சள் நிர ஆடையிலிருப்பது யாரோ என்று ஹெ வென் கேட்க, " மஞ்சல் நிற ஆடை உடுத்திய உருவம் "நான் தங்கம். அறையின் மேற்கு பகுதி சுவற்றுக்கு அடியில் இருக்கிறேன் என்றது. அடுத்து ஹெ வென் "பச்சை நிற ஆடை உடுத்தியது யாரோ" என்று கேட்க, பச்சை நிற ஆடையணிந்த உருவம் "நான் செப்பு. அறைக்கு முன்னேயுள்ள கிணற்றிலிருந்து ஐந்து அடியில் இருக்கிறேன்" என்றது. ஹெ வென் தொடர்ந்து "வெண்ணிற ஆடையில் இருப்பது யார்" என்று கேட்க " நான் வெள்ளி. அறையின் வடகிழக்கு முலையில் உள்ள தூணிற்கு அடியில் இருக்கிறேன்" என்று பதில் வர, "ஆமாம் நீ யாரோ" என்ற கேட்டபோது " நான் அடுப்புக்கு அடியில் உள்ள உலக்கை" என்று பதில் வந்தது.
பின் விடிந்ததும், அந்த உருவங்கள் குறிப்பிட்ட இடங்களை தோண்டி 250 கிலோ தங்கள், 250 கிலோ வெள்ளி மற்றும் 10 இலட்சம் செப்பு நாணயங்களை கண்டெடுத்தான் ஹெ வென். பிறகு அடுப்பிற்கு கீழே இருந்த உலக்கையை எடுத்து எரித்தபின் வீட்டில் ஆவிகளின் நடமாட்டம் இல்லாமல் போனதாம்.