• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-29 17:03:25    
பெய்ஜிங்கிலான லியன் ச்சானின் பயணம்

cri

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவுறுப்பினரும் பெய்ஜிங் மாநகரின் கட்சி செயலாளரும் பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் தலைவருமான லியூ ஜி இன்று பெய்ஜிங்கில் சீனக் கோமின்தான் கட்சியின் கௌரவ தலைவர் லியன் ச்சானையும் அவர்தம் குழுவினரையும் சந்தித்துரையாடினார்.

பெய்ஜிங் ஒலிம்பிக் மையத்திற்கு  லியன் ச்சான் அன்பளிப்பாக வழங்கிய Shui xiou எனும் தைவான் சிற்பம் தைவான் உடன்பிறப்புகள் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு பணிக்கு காட்டுகின்ற அக்கறையையும் ஆதரவையும் முழுமையாக எடுத்துக் காட்டியுள்ளது. அதற்கு நன்றி தெரிவிப்பதாக லியூ ஜி சந்திப்பின் போது தெரிவித்தார். தைவான் உடன்பிறப்புகள் இந்த வரலாற்று தன்மை வாய்ந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு அவர் இதயப்பூர்வமாக அழைப்பு விடுத்தார்.

Shui xiou எனும் தைவான் சிற்பம் இன்று பெய்ஜிங் ஒலிம்பிக் மையத்தில் நிறுவப்பட்டது. லியன் சான்  அது நிறுவப்பட்ட விழாவில் கலந்து கொண்டார். விழாவில் உரை நிகழ்த்துகையில் ச்சிற்பத்தின் தோற்றம் மற்றும் முக்கியத்துவம் பற்றி விளக்கி கூறினார். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு அவர் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார்.