சீனாவின் திபெத், அமைதியாக விடுதலை பெற்று, ஐனநாயக சீர்திருத்தத்தை மேற்கொண்டு, பண்ணை அடிமை அமைப்பு முறையை ஒழித்துள்ளது. குறிப்பாக, சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்புப் பணி தொடங்கிய பின், திபெத்தில் தலைகீழான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. திபெத்திலான ஒரே வாழும் மகளிர் புத்தரான Sangdang.Dorje phakmo.Dechen chodron, அண்மையில் செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது இவ்வாறு கூறினார்.
தலாய்லாமா குழுவினரின் தூண்டுதலால், மார்ச் திங்கள் 14ம் நாள், சில தீவரவாதிகள் லாசாவில் வன்செயல்களை மேற்கொண்டனர். 14வது தலாய்லாமா மற்றும் அவரது ஆதரவாளர்களின் குற்றச் செயல்கள், புத்த மதத்தின் விதிகள் மற்றும் கோட்பாடுகளைக் கடுமையாக மீறின. திபெத் மரபுவழி புத்தமதத்தின் ஒழுங்கிற்கும் புகழுக்கும் கடுமையாக தீங்கிழைத்தன என்று அவர் கூறினார்.
|