நீங்கள் கேட்டு கொண்டிருக்கின்ற ஒலி பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி துவங்குவதற்கு முன்பான 100வது நாளை கொண்டாடும் ஒலியாகும். தொண்டர்கள் உறுதி மொழி எடுத்து ஒலிம்பிக்கிற்கு சேவை புரிந்து அதன் எழுச்சியை வெளிக் கொணரும் உறுதி மொழியும் இந்த ஒலியாகும். ஒலிம்பிக் எழுச்சியை வெளிப்படுத்துவது உலக மக்கள் அனைவரின் கூட்டு விருப்பமாகியுள்ளது. பெய்ஜிங் ஒலிம்பிக் துவங்குவதற்கு முன்பான 100வது நாளை வரவேற்கும் வகையில் இன்று பெய்ஜிங் உள்ளிட்ட சீனாவின் பல நகரங்களில் கொண்டாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. சீன மக்கள் பல்கலைக்கழகத்தின் மானிட வள ஒலிம்பிக் ஆய்வு மையத்தின் செயல் தலைவர் கிங் யுவான் பூ இது பற்றி கூறியதாவது.
ஒலிம்பிக் விளையாட்டு போட்டி துவங்குவதற்கு முந்தைய 100வது நாளில் அமைதியான ஒலிம்பிக்கை நாம் நடத்த வேண்டும் என்ற மன உறுதியை சீன மக்கள் தெரிவிக்க விரும்புகின்றனர் பல்வேறு நாடுகளிலிருந்து வருகின்ற நண்பர்களை நல்லெண்ணத்துடன் உபசரிப்போம். அவர்களுடன் இணைந்து மனித குலத்தின் இந்த மகிழ்ச்சிகரமான விழாவை கொண்டாடுவோம் என்று சீன மக்கள் உலகத்திற்கு தெரிவிக்கின்றனர் என்றார் அவர். ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் விளையாட்டு துறையில் பிரமாண்டமான விழாவாகும். அதுமட்டுமல்ல மனித குலத்தின் கூட்டு விருப்பத்தையும் கனவையும் நிறைவேற்றும் கடமையை இது பொறுப்பேற்றுள்ளது. கடந்த 100க்கும் அதிகமான ஆண்டுகளில் நவீன ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பல்வேறு நாடுகள், தேசிய இனங்கள் மற்றும் மதங்களை கொண்ட மக்களின் நாகரிகம், பரிமாற்றத் தொடர்பு ஆகியவற்றை கூட்டாக அனுபவிக்கும் வாய்ப்பாக மாறியுள்ளது. இந்த அடிப்படையில்தான் மேலதிக நாடுகளின் அரசாங்கங்களும் மக்களும் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு உற்சாகத்துடன் ஆதரவளித்துள்ளனர்.
ஒலிம்பிக் விளையாட்டு போட்டி நெருங்கி வரும் வேளையில் கிரேக்கத்தின் ஒலிம்பியாவிலிருந்து புனித தீபம் ஏற்றப்பட்டது முதல் பெய்ஜிங் வரை ஒலிம்பிக் வரலாற்றில் மிகவும் பரந்த தொலை தூர மற்றும் அதிகமான மக்கள் கலந்து கொள்ளும் தீபத் தொடரோட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையின் மூலம் அமைதி, நட்பு, முன்னேற்றம் உள்ளிட்ட சமூக எண்ணங்கள் உலகின் பல்வேறு இடங்களுக்கும் பரவியுள்ளது. இன்று ஒலிம்பிக்கின் புனித தீபம் சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசம் வந்தடைந்தது. இது முதல் தீபத் தொடரோட்ட நடவடிக்கை சீனாவில் நடைபெற துவங்குகிறது. இந்த தீபத் தொடரோட்டம் வெளிநாடுகளில் சில குறிப்பிட்ட இடங்களில் சீர்குலைக்கப்பட்ட போதிலும் புனித தீபத்தின் பெருமை சிறிதளவு கூட பாதிக்கப்பட வில்லை. உலகின் மிக முக்கிய ஒலிம்பிக் தீபதொடரோட்டம் பற்றிய மக்களின் விருப்பம் எதனாலும் தடுக்கப்பட முடியாது என்பதை இது காட்டுகின்றது. உலகின் பெரும்பாலான நாடுகளும் மக்களும் ஒலிம்பிக் விளையாட்டு புனித தீபத்திற்கு ஆர்வம் காட்டி பெய்ஜிங் ஒலிம்பிக் வெற்றி பெற போதியளவில் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஜப்பானில் தீபமேந்திய சியுச்சோ மாஸ்ஸுக்கா ஜப்பானில் புகழ் பெற்ற டென்னிஸ் விளையாட்டு வீரராவார். தீபம் ஏந்திய போது இருந்த உணர்வை பற்றி அவர் கூறியதாவது.
அமைதியான பயணம் என்பது இணக்கமான புனித தீபத் தொடரோட்டத்தின் தலைப்பாகும். அதன் மூலம் உலகில் அமைதியை உண்மையாக நனவாக்க வேண்டும். தீபத்தை ஏந்தி ஓடிய போது பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி அமைதியான சூழ்நிலையில் நடைபெற்று வெற்றி பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன் என்றார் அவர். வட கொரிய ஒலிம்பிக் குழுவின் துணைத் தலைவர் ரீ ச்சுன் செக் பெய்ஜிங் ஒலிம்பிகிற்கு வாழ்த்து தெரிவித்தார். அவர் கூறியதாவது. வட கொரிய மக்கள் பெய்ஜிங் ஒலிம்பிக் வெற்றிகரமாக நடைபெறுவதை விரும்புகின்றனர். எங்கள் மனங்கள் சுடர்விட்டு எரிகின்ற தீபம் போல உள்ளது. தீபமேந்துபவர்களின் தொடரமைப்புடன் புனித தீபம் பெய்ஜிங்கை வந்தடையும் என்று அவர் கூறினார். அனைத்து உலக மக்களின் நல்வாழ்த்து குறித்து கிங் யுவான் பூ கருத்து தெரிவித்தார். ஒலிம்பிக் விளையாட்டு போட்டி அமைதியான மகிழ்ச்சிகரமான விழாவாக நடத்தப்பட வேண்டும். உலகின் அனைத்து மக்களும் நட்பை அதிகரித்து பரஸ்பர புரிந்துணர்வை ஆழமாக்கும் விழாவாகவும் இது இருக்க வேண்டும். சீன மக்கள் சகிப்பு, பொறுமை, தந்னம்பிக்கை என்ற மனப்பான்மையுடன் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை சிறந்த உயர் நிலையின் அடிப்படையில் கன கச்சிதமாக நடத்த விரும்புகின்றார்கள் என்று அவர் தெரிவித்தார். ஒரே உலகம் ஒரே கனவு என்பது 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நனவாக்கப்படும். ஒலிம்பிக் விளையாட்டு போட்டி துவங்குவதற்கு முந்திய 100வது நாளன்று நாங்கள் வாக்குறுதி அளிக்கின்றோம். அதாவது, அனைத்து உலக மக்களின் ஆதரவு சீன மக்களின் முயற்சி ஆகியவற்றின் மூலம் 100 நாட்களுக்குப் பின் நடைபெறவுள்ள தலைசிறந்த ஒலிம்பிக் விழாவை பெய்ஜிங் மனித குலத்திற்கு முன்னால் நிச்சயமாக நன்றாக வெளிகாட்டும் என்பதே எங்கள் வாக்குறுதியாகும்.
|