திபெத் வரலாற்றில் பெற்றுள்ள முன்னேற்றங்களை பன்முகங்களிலும் வெளிப்படுத்துவது பற்றிய மாபெரும் கண்காட்சி இன்று பெய்சிங்கில் துவங்கியது. திபெத் நேற்றும் இன்றும் என்ற இக்கண்காட்சியில், திபெத்தின் வரலாறு, நிகழ்வு நிலை ஆகிய இராண்டு பகுதிகள் இடம்பெறுகின்றன. 100க்கு மேலான ஆவணங்களும் தொல் பொருட்களும், ஏறக்குறைய 500 நிழற்படங்களும் விளக்கப்படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன என்று தெரிய வருகின்றது.
திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் அரசு உள்ளிட்ட 4 நிறுவனங்களால் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கண்காட்சி மூலம், வரலாற்றில் திபெத்தின் வளர்ச்சி நிலைமையை வெளிப்படுத்தி, திபெத்துக்கான சீனாவின் கடந்தகால நடுவண் அரசுகளின் நிர்வாக நிலைமையை எடுத்துக்கூறவும், 1959ம் ஆண்டுக்கு முன், திபெத்தில் அரசியலை மதத்துடன் இணைத்த நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை அமைப்பு முறையின் கொடுமை பின் தங்கிய நிலை மற்றும் பின்னதைவையும், இன்றைய திபெத் பெற்றுள்ள முன்னேற்றங்கள் ஆகியவற்றை வெளிப்படுத்தவும் இந்த நிறுவனங்கள் விரும்புகின்றன.
|