கடந்த சில நாட்களில், எகிப்து, வடகொரியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலுள்ள சீன தூதரகங்களும் ஆஸ்திரேலியா கியூபா ஆகிய நாடுகளில் வாழ்கின்ற சீனர்களின் பிரதிநிதிகளும், நடவடிக்கை மேற்கொண்டு, வெளிநாட்டில் நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் வெற்றி பெற்றது மற்றும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்குவதற்கு முந்தைய 100வது நாளுக்கான வாழ்த்துகளை தெரிவித்தனர்.
அதை முன்னிட்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நோக்கி முன்னேறுவது என்ற தலைப்பிலான கைரோ சீன பண்பாட்டு மையம் வெளிப்படையான நடவடிக்கை, சீன-எகிப்து இளைஞர்கள் நட்புறவு கூட்டம் ஆகிய இரு நடவடிக்கைகளை நேற்று எகிப்திலுள்ள சீன தூதரகம் மேற்கொண்டது.
பியொங்யாங் நகரில், நேற்று, சீன தூதரகம், விருந்து நடத்தி, தீபத் தொடரோட்டம் பியொங்யாங்கில் வெற்றிகரமாக நடைபெற்றமை மற்றும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்குவதற்கு முந்தைய 100வது நாளை கொண்டாடியது.
சிட்னி நகரிலுள்ள சீன துணைத் தூதரகத்தில், ஆஸ்திரேலியாவில் வாழ்கின்ற 400 சீனர்கள், சீன மாணவர்கள், சீன தொழில் நிறுவனத்தின் பிரதிநிதிகள், தூதாண்மை அதிகாரிகள் ஆகியோர், இவ்விரு விழாக்களையும் கொண்டாடினர்.
நேற்று, ஹவானா நகரில், வாழ்கின்ற சீன பிரதிநிதிகள் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்குவதற்கு முன்தைய 100வது நாளை கொண்டாடினர்.
|