ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் எல்லா வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு, பெய்ஜிங்கின் காற்று தரம், பாதுகாப்பானது என்று சர்வதேச ஒலிம்பிக் குழுவின் விளையாட்டு மருத்துவ சம்மேளனத்தின் தலைவர் Arne Ljungqvist அண்மையில் ஸ்விட்சர்லாந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த போது தெரிவித்தார்.
விளையாட்டு மருத்துவ துறையின் செல்வாக்கு வாய்ந்த நிபுணர், அவராவார். பெய்ஜிங்கின் காற்று தரம், பெருமளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது என்று பல சான்றுகள் நிரூபித்துள்ளன. காற்று தரம், வீரர்களின் உடல் நலத்தைப் பாதிக்காது என்று கூறிய அவர், சில செய்தி ஊடகங்கள், வியாபார நோக்கில் செய்தி சேவை செய்ய கூடாது என்றும் தெரிவித்தார்.
காற்று தரத்தை மேம்படுத்தும் வகையில், சீன அரசு மற்றும் பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழு செய்த முயற்சிகளுக்கு சர்வதேச ஒலிம்பிக் குழு நன்றி தெரிவித்தது என்று அவர் கூறினார்.
|