இன்று பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி தொடங்குவதற்கு முந்தைய 100வது நாளாகும். சீனாவில் மிகப் பெரும்பாலான நகரங்கள் பல கொண்டாட்டங்களை மேற்கொண்டுள்ளன.
அதை முன்னிட்டு மிக பெரிய ஒருங்கணைப்பு கூட்டம் இன்று முற்பகல் பெய்சிங் மக்கள் மகாமண்டபத்தில் நடைபெற்றது. சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் குழுவின் தலைவர் சியா சிங்லின் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சை, கல்வி, விளையாட்டு முதலிய துறைகளின் 6000 சமூக பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
அடுத்த 100 நாட்களில், பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் குழு மற்றும் பல்வேறு வாரியங்களின் கடமைகளைப் பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் தலைவர் லீயு சிய் இக்கூட்டத்தில் தெரிவித்தார். அத்துடன், ஒலிம்பிக் மற்றும் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு தேவையான பணிகளை மேலும் முன்னேற்றி, சர்வதேச ஒலிம்பிக் மற்றும் சர்வதேச ஊனமுற்றோர் ஒலிம்பிக் கமிட்டிகள் உடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தி, உயர் நிலை மற்றும் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த ஒலிம்பிக் விளையாட்டு போட்டி நடைபெறும் வகையில், முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஒலிம்பிக் தன்னார்வத் தொண்டர்கள், சீன மற்றும் வெளிநாட்டு விருந்தினர்களுக்கு விண்ணப்ப மற்றும் பன்முக சேவையை வழங்குவார்கள் என்று இக்கூட்டத்தில் பீகிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒலிம்பிக் தன்னார்வத் தொண்டரின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
இதணை கொண்டாடும் வகையில், மக்களிடை நீண்ட தூர ஓட்டப் போட்டி, அதாவது, 2008ம் ஆண்டு பெய்சிங் சர்வதேச நீண்ட தூர ஓட்டப்போட்டி விழா இன்று முற்பகல், பெய்சிங் ஒலிம்பிக் மையப் பகுதியில் நடைபெற்றது. சுமார் ஆயிரம் மக்களும் வெளிநாட்டு வீரர்களும் இந்நடவடிக்கையில் கலந்துகொண்டனர்.
தவிர, சீனாவின் மிகப் பெரும்பாலான நகரங்கள் பல கொண்டாட்டங்களை மேற்கொண்டு, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை வரவேற்றன. வடக்கு சீனாவின் சின் ஹாங் தாவ் நகரில் கொண்டாட்ட நடவடிக்கை சிறப்பாக நடைபெற்றது. அந்நகரிலுள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 3000 பேர் ஒன்று திரண்டு, ஒலிம்பிக் நெருங்கி வருவதை கூட்டாகக் கொண்டாடினர்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறுவதற்கு 100 நாட்கள் இருகின்ற தருணத்தில், திபெத் தன்னாட்சிப் பிரதேச மக்கள் ஒலிம்பிக்கில் கவனம் செலுத்தி பங்கெடுத்து வரும் பேரூக்கம் மேலும் உயர்த்தப்பட்டது. சுமார் 3 ஆயிரம் திபெத் மக்கள் இன்று திபெத் பல்கலைக்கழகவளாகத்தில், கொண்டாட்ட நடவடிக்கைகளை நடத்தினர். இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி, திபெத் மக்களின் விளையாட்டு நடவடிக்கைகளுடன் தொடர்புடைய வாரியங்கள் செயல்பாடுகளை செவ்வனே மேற்கொள்ள வேண்டும் என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் துணைத் தலைவர் Gong Puguang கூறினார்.
|