விளையாட்டு அரங்கில் புகை தடுப்பு
cri
மே திங்கள் முதல் நாள் கொடக்கம் சீனாவின் பெய்ஜிங் மாநகரில் புகை பிடி தடை தொடர்பான புதிய விதி நடைமுறைக்கு வரக் துங்கியுள்ளது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் அனைத்து திடல்களும் அரங்குகளும் உடல் பயிற்சி அரங்குகளும் சமூகத்திற்கு திறந்து வைக்கப்பட்ட தொல் பொருள் பாதுகாப்பு இடங்களும் புகை தடுப்பு இடங்களாகியுள்ளன. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு புகையில்லாத ஒலிம்பிக் விளையாட்டு போட்டியாக இருக்க வேண்டும். அப்போது புகை தொடர்பான விளம்பரம் மறுக்கப்படும். சிகரெட் தயாரிப்பாளர்களின் நிதி உதவியும் மறுக்கப்படும். சட்ட விதியின் நடைமுறையாக்கத்தை கண்காணிக்கும் வகையில் தொடர்புடைய பெய்ஜிங் மாநகர வாரியங்கள் ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறப்பு கண்காணிப்பாளர்களை அணித்திரட்டியுள்ளது. கண்காணிப்புப் பணியில் பங்கு கொள்ள ஒரு லட்சம் தொண்டர்களும் சேர்க்கப்படுவர் எனத் தெரியவருகின்றது.
|
|