வெளிநாடுகளிலுள்ள சீனர்களின் விருப்பம்
cri
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்குவதற்கு முந்தைய 100வது நாளில் பெல்ஜியம், இத்தாலி, எகிப்து ஆகிய நாடுகளில் வாழ்கின்ற சீனர்களும் சீன மாணவர்களும் அடுத்தடுத்து பல்வகை நடவடிக்கைகளை மேற்கொண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கை வரவேற்றுள்ளனர். நேற்று சுமார் ஆயிரம் கடல் கடந்து வாழும் சீனர்களும் சீன மாணவர்களும் மழையை பொருட்படுத்தாமல் பிரசல்சில் பொதுக் கூட்டம் நடத்தி பெய்ஜிங் ஒலிம்பிக்கிற்கு ஆதரவளிக்கும் மன உறுதியை தெரிவித்தனர். அதேவேளையில் அவர்கள் சீனாவில் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்புக் கொள்கை நடைமுறைக்கு வந்த பின் பெறப்பட்டுள்ள மாபெரும் சாதனைகளையும் அவர்கள் உயர்வாக பாராட்டினர். எகிப்திலுள்ள சீனர்களும் சீன மாணவர்களும் கெய்ரோவில் பல கொண்டாட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு கையொப்பமிடும் வடிவத்தில் பெய்ஜிங் ஒலிம்பிக்கிற்கு ஆதரவு தெரிவித்தனர். ஜப்பானில் கல்வி பயில்கின்ற சீன மாணவர் சங்கத்தின் தலைவர் லீ க்குவான்ச்செ டோக்கியோவில் அங்குள்ள சீன மாணவர்களின் சார்பில் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தார்.
|
|