பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்குவதற்கு முந்தைய 100வது நாளின் போது, கம்போடிய தலைமை அமைச்சர் ஹூன் சேன், பெலாரஸ் அரசு தலைவரின் துணையாளர் அலெக்சீன்கோ, லத்விய ஒலிம்பிக் குழுவின் தலைவர் வூருப்லேவ்ஸ்கிஸ் ஆகியோர், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்.
கம்போடிய மக்கள் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு மிக அருமையான வாழ்த்துகளை தெரிவித்தனர் என்று ஹூன் சேன் தெரிவித்தார்.
பெலாரஸ்-சீனா நட்பு, ஆழ்ந்த பாரம்பரியம் கொண்டது. இப்போட்டி, வெற்றி பெற வேண்டும் என்று பெலாரஸ் விரும்புவதாக பெலாரஸ் அரசு தலைவரின் துணையாளர் அலெக்சீன்கோ 29ம் நாள் தெரிவித்தார்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்த, சீன அரசும் மக்களும் பெருமளவான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். சர்வதேச சமூகம், இப்போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறது என்று லத்விய ஒலிம்பிக் குழுவின் தலைவர் வூருப்லேவ்ஸ்கிஸ் 28ம் நாள் கூறினார்.
|