ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நெறிவரைவு படம்
cri
ஒலிம்பிக் தீபம் ஜொல்மோ லுங்மா சிகரத்தில் ஏறுகினற தொடரோட்ட நடவடிக்கையில் மலை ஏறும் விளையாட்டு வீரர்கள் இம்மலையின் வட பகுதியிலுள்ள பாரம்பரிய நெறி வழியாக உலகின் உயரமான உச்சி பகுதிக்கு ஏறுவர் என்று பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழுவின் தீபத் தொடரோட்ட மையத்தின் ஜொல்மோ லுங்மா சிகரத்தின் பணி குழுவின் பொறுப்பாளர் சன் ப்பிங் நேற்று செய்தி ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தினார். இந்த பாரம்பரிய நெறியின் தொடக்கம் கடல் மட்டத்திலிருந்து 5200 மீட்டர் உயர்மான ஜொல்மோ லுங்மா சிகரத்தின் முகாமாகும். விளையாட்டு வீரர்கள் அங்கிருந்து புறப்பட்டு 6500 மீட்டர் உயரமான முன்னேற்ற முகாமை நோக்கி ஏறி கடைசியில் 8300 மீட்டர் உயர்வான துடைப்பு முகாம் சென்றடைவார்கள். அங்கிருந்து விளையாட்டு வீரர்கள் தீபத்தை ஏந்தியவாறு உச்சிக்கு செல்ல வேண்டும். இந்த நெறி சுமார் 28 கிலோமீட்டர் நீளமாகும். முன்னேற்ற முகாமிருந்து உச்சிக்கு வரை 20 கிலோமீட்டர் நீளமாகும். இந்த தீபம் ஏந்தும் அணி முக்கியமாக திபெத் மற்றும் ஹென் இன வீரர்களால் உருவாக்கப்படுகின்றது. வீராங்கனைகள் அணியில் இடம் பெறலாம் என்று அறியப்படுகின்றது.
|
|