திபெத்தின தொழில் முனைவோர் எண்ணிக்கை
cri
தற்போது, மெமேன்லும் அதிகமான திபெத் மக்கள் வணிகத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் விளைவாக திபெத்தின தொழில் முனைவோரின் எண்ணிக்கை அதிகமாக அதிகரித்து வருகின்றது.
வெளிநாட்டுத் திறப்பு பணி மற்றும் சமூகப் பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சியுடன், புதிய அறிவுகள் மற்றும் தொழில் நுட்பங்கள், வலுவான நிர்வாக ஆற்றல் ஆகியவற்றைக் கொண்ட திபெத் மக்கள் தொழில்களை நடத்தும் முக்கிய ஆற்றலாக மாறியுள்ளனர். திபெத் மருந்து, திபெத் கைவினைப் பொருட்கள், சுற்றுலா முதலிய துறைகளில் பல திபெத்தின தொழில் முனைவோர்கள் சாதனை பெற்றுள்ளனர்.
திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தொழில் மற்றும் வணிகத் துறை பணியகத்தின் புள்ளிவிவரங்களின் படி, கடந்த ஆண்டு இறுதி வரை, திபெத்தில், தனியார் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 4200ஐத் தாண்டியுள்ளது. அவற்றில் பணி புரியும் பணியாளரின் எண்ணிக்கை சுமார் 81 ஆயிரமாகும். அவற்றில் 90 விழுக்காட்டுக்கு மேலானவற்றின் தலைவர்கள் திபெத் இனத்தவராவர்.
|
|