• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-05 09:59:12    
தலாய் பற்றிய சிங்குவா செய்தி நிறுவனத்தின் விமர்சனம்

cri
தலாய் லாமா, சீனத் தேசம் மற்றும் தேசியத்தின் நலன்களை முக்கியமாக கொண்டு, நடைமுறை நடவடிக்கைகளைப் பயன்படுத்தி, தாய்நாட்டைப் பிரிக்கும் நடவடிக்கையை உண்மையாகவே நிறுத்துவதை வெளிக்காட்டி, அடுத்த கலந்தாலோசனைக்கு சாதகமான நிலைமையை ஏற்படுத்த வேண்டுமென மக்களால் விரும்பப்படுவதாக சீனாவின் சிங்குவா செய்தி நிறுவனம் நேற்று விமர்சனத்தை வெளியிட்டுச் சுட்டிக்காட்டியது.

தலாய் லாமாவால் பல முறை செய்யப்பட்ட அழைப்பின் பேரில், நேற்று, நடுவண் அரசின் தொடர்புடைய வாரியங்களின் பொறுப்பாளர்கள் தெற்குச் சீனாவின் ஷேன் ச்சேன் நகரில், தலாய் லாமாவின் தனிப்பட்ட பிரதிநிதியுடன் தொடர்பு கொண்டுள்ளனர். தலாய் லாமாவுக்கான நடுவண் அரசின் கொள்கை, நிரந்தரமாகவும், தெளிவாகவும் இருப்பதோடு, பேச்சுவார்த்தையின் கதவு அகல திறந்திருப்பதை, இக்கலந்தாலோசனை மீண்டும் அதிகரித்துள்ளது. தலாய் லாமா பல வேண்டாத செயல்கள் மேற்கொண்ட போதிலும், அக்குழுவினர், பொது நன்மையை முக்கியமாகக் கொண்டு, சொல்லும் செயலும் ஒன்றாகி, சரியான பாதைக்குத் திரும்புவதற்காக, நடுவண் அரசு பொறுமையுடன் அறிவுரை கூறியது என்று இவ்விமர்சனம் சுட்டிக்காட்டியது.

நடுவண் அரசு, தலாய் லாமா மீது, பெருமளவிலான பொறுமை மற்றும் நல்லெண்ணத்தைத் தெரிவிப்பதை, உண்மைகள் முழுமையாகக் கோடிட்டுக்காட்டின.