• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-06 10:13:35    
தான் ச்சே கோயில் (அ)

cri

தான் ச்சே கோயில், கி.பி. 307ம் ஆண்டில் கட்டியமைக்கப்பட்டது. முன்பு, இது, ச்சியா ஃபூ கோயில் என அழைக்கப்பட்டது. சிங் வம்சக்காலத்தில், க்காங் சி பேரரசரால் அதன் பெயர் ச்சியூ யுவன் கோயில் என்று மாற்றப்பட்டது. ஆனால், இக்கோயிலின் பின்புறத்தில், சுனை பொங்குகின்ற ஊற்றும் (சீன மொழியில் லோங் தான்), மலையில் cudrania tricuspidata மரங்களும் (சீன மொழியில் ச்சே ஷூ) இருப்பதால் தான் இது பொது மக்களால் தான் ச்சே கோயில் என அழைக்கப்பட்டுள்ளது. அதற்கு 1700 ஆண்டுகால வரலாறு வாய்ந்தது.

தான் ச்சே கோயில், மேற்கு பெய்ஜிங்கிலுள்ள மேன் தோ க்கோ பிரதேசத்தின் தெற்கிழக்குப் பகுதியிலுள்ள தான் ச்சே மலை அடிவாரத்தில் உள்ளது. அது, பெய்ஜிங் மாநகரத்தின் மையத்திலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

அது, தெற்கு நோக்கியதாய் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. அதனைச் சுற்றி, 9 உயரான மலைகள் காணப்படுகின்றன. அவற்றால், வடமேற்கிலிருந்து வருகின்ற குளிர் காற்று தடுக்கப்படுகிறது. ஆகவே, இங்குள்ள கால நிலை, மிதமாகவும், ஈரமாகவும் இருக்கிறது.

இக்கோயிலில், பழங்கால மரங்களும் புத்தக் கோபுரங்களும் வானளாவ நிற்கின்றன. இங்குள்ள கட்டிடங்கள், நில அமைப்பின்படி, சாமர்த்தியமாகக் கட்டியமைக்கப்பட்டுள்ளன. பசுமையான மூங்கில்களும் புகழ்பெற்ற மலர்களும் இக்கட்டிடங்களிடையே தூவுகின்ற காட்சி, மிகவும் அழகாக இருக்கிறது.

தான் ச்சே கோயில் பிரமாண்டமானது. அதன் உள் பகுதியின் பரப்பளவு 2.5 ஹெக்டராகும். வெளி பகுதியின் பரப்பளவு, 11.2 ஹெக்டராகும். அவற்றைத் தவிர, இக்கோயிலுக்குரிய காடு மற்றும் மலைகள் உள்பட, அதன் மொத்த நிலப்பரப்பு 121 ஹெக்டருக்கு மேலாகும்.