 யா துங் மாவட்டம், திபெத்தின் தெற்குப் பகுதியின் கோடியில் அமைந்துள்ளது. இவ்வாண்டு ஆக்ஸ்டு திங்களின் பிற்பாதியில், எமது செய்தியாளர் குழு திபெத்தில் பயணம் மேற்கொண்டது. இம்மாவட்டத்தின் மைய சாலையில், ஒரு வாழ்த்து பதாகையை செய்தியாளர்கள் கண்டனர். சியா யா துங் வட்டத்தைச் சேர்ந்த லாச்சு எனும் மாணவர் சின் குவா பல்கலைக்கழகத்தின் தேர்வில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் என்று இந்த பதாகையில் எழுதப்பட்டிருந்தது. சீனாவில் இத்தகைய ஒதுக்குப் புறபிரதேசத்தில் ஒரு மாணவர் சின் குவா போன்ற முதல் தர பல்கலைக்கழகத்தில் சேருவது மக்களுக்கு மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சியாகும்.
சின் குவா பல்கலைக்கழகம் சீனாவில் மிகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகமாகும். ஒவ்வொரு ஆண்டும், முழு நாட்டிலும் நடைபெற்ற உயர் கல்வி நிலையங்களுக்கான நுழைவு தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களில் சிறந்தவர்கள் மட்டுமே இந்தப் பல்கலைக்கழகத்தில் சேர முடியும். சாதாரண விவசாயியின் மகனான லாச்சு, இவ்வாண்டு தலைசிறந்த மதிப்பெண்ணுடன் சின் குவா பல்கலைக்கழகத்தின் நீர் பாசன வசதி பிரிவில் நீர் பாசன வசதி மற்றும் நீர் மின் பொறியியல் துறையில் சேர்ந்தார். யா துங் கல்வி வரலாற்றில் சின் குவா பல்கலைக்கழகத்தில் சேர்ந்த முதல்நபர் லாச்சு ஆவார். உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ளனர்.
இவ்வாண்டு 12 வயதான சாசிதச்சே கூறியதாவது

அவர் எங்கள் பெருமை. எங்களது பள்ளிக்கு புகழ் பெற்று தந்துள்ளார். அவரைப் போல் நன்றாக பயின்று, பீக்கிங் பல்கலைக்கழகத்தில் சேர வேண்டும் என்றார் அவர்.
லாச்சுவை அறிந்த ஒருவர் இம்மாணவரின் கதையைக் கூறினார். சியா யா துங் வட்டம் பீடபூமியில் கடல் மட்டத்திலிருந்து 4000 மீட்டர் உயரமான மலை பிரதேசத்தில் அமைந்துள்ளது. சேறுசகதிகள் நிறைந்த மலை தெரு வழியாக, எமது செய்தியாளர்கள் லாச்சு வீட்டுக்குச் சென்றனர். லாச்சு, அவரது தாய், தம்பி ஆகியோர் பெய்ஜிங்கிற்குச் சென்றிருந்தனர். வீட்டில் வயதான தந்தை, மூளை வளர்ச்சி குன்றிய சித்தப்பா ஆகிய இருவரும் உள்ளனர். வீட்டில் தட்டுமுட்டு சாமான்கள் குறைவு. ஆனால், மிகவும் சுத்தமான வீடு. ஒரு சுவரில், லாச்சு பெற்ற சான்றிதழ்கள் வரிசையாகவும் ஒழுங்காகவும் தொங்கவிடப்பட்டுள்ளன.
லாச்சுவின் தந்தை மிகவும் மெலிந்தவராவார். கண்ணீர் மல்க அவர் கூறியதாவது

எனக்கு வயதாகிவிட்டது. உடல் நலமாக இல்லை. வீட்டில் உழைப்பு ஆற்றல் குறைவு. வாழ்க்கை கடினமானது. லாச்சுவின் அம்மா நாள்தோறும் மலைப் பிரதேசத்தில் விறகு திரட்டி, மூலிகை மருந்தைச் சேகரிப்பதன் மூலம் கிடைப்பதை வைத்து வாழ்க்கையை நடத்துகின்றோம்.. வட்டத்தின் அரசு எங்களுக்கு வீட்டைக் கட்டியமைத்து தந்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் நற்கொள்கை, மாவட்ட அரசின் பெரும் உதவி ஆகியவை இல்லாவிட்டால், எங்கள் மகன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பயில முடியாது என்றார் அவர்.
ஆண்டு வருமானம் 3000 யுவான் மட்டுமே கொண்ட இந்த வறிய குடும்பத்தில் 2 பிள்ளைகள் சிறு வயதிலிருந்தே வாழ்க்கையின் கடினத்தை அறிந்து கொண்டனர். அவர்கள் சிரமப்பட்டு பயின்றனர். மதிப்பெண்களின் அடிப்படையிலான கல்வி பதிவு சிறப்பானது. 2004ம் ஆண்டு லாச்சு தலைசிறந்த மதிப்பெண்ணுடன் சான் துங் மாநிலத்தின் முக்கிய நடுநிலை பள்ளியில் சேர்ந்தார். அவரின் கல்வி பதிவு எப்போதும் முன்னணியில் உள்ளது. தம்பி ஓச்சுவும் சிறந்த மாணவர் ஆவார். இவ்வாண்டு 583 என்ற சிறந்த மதிப்பெண்ணுடன் ச்சியாங் சு மாநிலத்து நான் துங் திபெத் நடு நிலை பள்ளியில் சேர்ந்தார். இருவரும், குடும்பத்தினரின் பெருமை. இது மட்டுமல்ல, முழு யா துங் மாவட்டத்தின் கல்வி துறையும் இவர்களைப் பற்றி பெருமிதம் கொள்கின்றது.
யா துங் மாவட்டத்தின் கல்வி பணியகத்தின் துணைத் தலைவர் deqing zhuoma கூறியதாவது

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியும், அரசவையும் திபெத் கல்வி இலட்சியத்தின் வளர்ச்சியில் எப்போதும் உயர் கவனம் செலுத்துகின்றன. திபெத்துக்கு ஒரு தொகுதி சலுகை கொள்கைகள் வகுக்கப்பட்டன. 1985ம் ஆண்டு உள் பிரதேசத்தில் ஒவ்வொரு மாநிலங்களிலும் மாநகரங்களிலும் திபெத் வகுப்புகளை நடத்தத் துவங்கியது. துவக்கப் பள்ளி கல்வி நிறைவேற்றிய திபெத் மாணவர்கள் முழு தன்னாட்சி பிரதேசத்தின் தேர்வில் கலந்து கொள்ளலாம். அவர்களில் சிறந்தவர்கள் உள் பிரதேசத்தில் திபெத் வகுப்புகளில் பயிலலாம். லாச்சு எனும் மாணவர் அவர்களில் ஒரு மாதிரியாவார் என்றார் அவர்.
இவ்வாண்டு யாதுங் மாவட்டத்தில் 26 மாணவர்கள் உள் பிரதேசத்தின் திபெத் வகுப்புகளில் சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யாதுங் மாவட்ட அரசு லாச்சுவுக்கு 3000 யுவான் பரிசு வழங்கியது. அவரது குடும்ப நிலைமைக்கேற்ப மேலும் நன்கொடை திரட்ட ஏற்பாடு செய்தது. ஆனால் லாச்சு இதனை மறுத்தார். அரசின் கல்வி உதவி கடன் பெறுவதன் மூலம் கல்வி கட்டணத்தை செலுத்தலாம். பட்டம் பெற்ற பின், படிப்படியாக கடன் தொகையைத் திருப்பி கொடுக்கலாம் என அவர் திட்டமிட்டுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியும் அரசும் அவரை பல ஆண்டுகளாக வளர்த்துள்ளன. கல்வி கட்டணம் திருப்பிக் கொடுக்க முடியாது போனால், எதிர்காலத்தில் சமூகத்துக்கு என்ன பங்காற்ற முடியும் என்று அவர் கருதினார்.

திபெத்திலான பயணத்தை முடித்துக் கொண்டு எமது செய்தியாளர்கள் பெய்ஜிங்கிற்கு திரும்பிய பின், சின் குவா பல்கலைக்கழகத்தில் லாச்சுவைச் சந்தித்தார். ராணுவ பயிற்சி பெற்றிருந்த லாச்சுவின் முகம் கறுப்பாக உள்ளது. தன்னம்பிக்கையுடையவராவார். அவர் கூறியதாவது
சின் குவா பல்கலைக்கழகத்தில் பயில்வது எனது கனவாகும். மேநிலை பள்ளியில் பயின்ற போது, 2 கல்வி ஆண்டுகளுக்கு மூத்த ஒரு மாணவி தேர்வின் மூலம் சின் குவா பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததால் மிகவும் புகழ் பெற்றார். அப்போது முதல் சின் குவா பல்கலைக்கழகத்தில் பயில்வது எனது விருப்பமாகிவிட்டது என்றார் அவர்.

முந்திய கல்வி அனுபவம் பற்றி அவர் மீளாய்வு செய்தார். 9 ஆண்டு கட்டய கல்வி கட்டத்தில், கல்வி கட்டணம் செலுத்த தேவையில்லை. பிறகு, உள் பிரதேசத்தின் மேநிலை பள்ளியில் பயின்ற போது, கல்வி மற்றும் உணவு கட்டணம் நீக்கப்பட்டது. இதனால், அவர் தனது கல்வியைத் தொடர்கின்றார். சின் குவா பல்கலைக்கழகத்தில் சேர்ந்த பின், ஓய்வு நேரத்தில் வேலை செய்ய அவர் விண்ணப்பம் செய்தார். தனக்கு உகந்த கல்வி திட்டத்தையும் வகுத்துள்ளார். குடும்ப நிலைமைக்கேற்ப, பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்ற பின், முதலில் திபெத்துக்குத் திரும்பி பணி புரியலாம், பிறகு, மேற்படிப்புக்காக ஏற்பாடு செய்யலாம் என்று லாச்சு திட்டமிட்டார்.
லாச்சுவின் மனதில் திபெத் பீடபூமி இப்போதும் உயர் நிலையில் உள்ளது. பாடலுடன் அவருடைய கனவும் மேலும் உயர்வாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகின்றோம்.
|