• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-06 10:39:59    
பெய்ஜிங் ஒலிம்பிக் செய்திகளை கேட்க எதிர்பார்க்கின்றநேயர்கள்

cri

கலை: இது உங்கள் நேரம். கடிதங்கள், மின்னஞ்சல்கள் மூலம் நீங்கள் எமக்கு அனுப்பிய கருத்துக்களின் தொகுப்பான நேயர் நேரம் நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
க்ளீட்டஸ்: ஊட்டி எஸ். கே. சுரேந்திரன் எழுதிய கடிதம்.
அறிவியல், கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில் சீனாவின் ஜியாங்சு மாநிலத்தின் நான்சிங் நகரிலுள்ள செஞ்சிலுவை மருத்துவமனை பற்றி அறிந்துகொண்டேன். பெரிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு பல ஆயிரம் யுவான தேவைப்படும் இக்காலத்தில், பொது மக்களுக்கு நன்மை பயக்கும் இந்த

மருத்துவமனையை நான்சிங் நகர அரசு நிறுவியுள்ளது, மிகவும் வரவேற்கத்தக்கது. வாழ்க்கையில் இன்னலுக்குள்ளாகிய, குறைந்த வருமானமுடைய மக்களிடையே இந்த செஞ்சிலுவை மருத்துவமனை புகழ்பெற்றுள்ளது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்.
கலை: அடுத்து இசை நிகழ்ச்சி குறித்து ஈரோடு வெ. ராஜேஸ்வரி எழுதிய கடிதம். சீனாவின் தென்பகுதி நாட்டுப்புறப் பாடல்களான, தாய் வீட்டிற்கு திரும்பும் பெண் படகோட்டியை கேட்கும் பாடல், மல்லிகைப்பூ பற்றிய பாடல், காதலி குயில் போன்ற குரலில் அன்பினை வெளிப்படுத்தும் பாடல் ஆகியவை நன்றாக இருந்தன. உலகப் புகழ் பெற்ற சீன மொழிப் பாடகி சுங்மின் அவர்களின் இனிமையான குரலில் தவழ்ந்த இந்த பாடல்கள், சிறப்பாக இருந்தன.


க்ளீட்டஸ்: சென்னை எஸ். ரேணுகாதேவி எழுதிய கடிதம். ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தில் பங்கேற்க விரும்பிய 103 வயது பெண்மணி பற்றிய சீன மகளிர் நிகழ்ச்சியை கேட்டேன். இந்த வயதிலும் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தில் பங்கேற்க வேண்டி, நாள்தோறும் நடைபயிற்சி செய்துவரும் அம்மையாரின் தன்னம்பிக்கை போற்றுதற்குரியது
கலை: இலங்கை காத்தான்குடி எம். டி. தூபா ஆயிஷா எழுதிய கடிதம். சீனா என்றதும் சீனப் பெருஞ்சுவர் நினைவுக்கு வரும். இப்போது சீன வானொலிதான் நினைவுக்கு வருகிறது. சீன வரலாற்றுச் சுவடுகள், விளையாட்டுச் செய்திகள், அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு ஆகிய நிகழ்ச்சிகள் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பில் சிறப்பானவை. நீங்கள் அனுப்பும் இதழ்கள் மிகவும் பயனுள்ளவை.
க்ளீட்டஸ்: அடுத்து நேயர் நேரம் நிகழ்ச்சி பற்றி பாண்டிச்சேரி பி. சந்திரசேகரனின் மின்னஞ்சல்.. இன்றைய கால கட்டத்தில் வானொலி நிகழ்ச்சிகளை நாள்தோறும் கேட்டு கடிதங்களை எழுதுவதென்பது கொஞ்சம் கடினமானதுதான். இருப்பினும் சீன வானொலியின் மீது உண்மையான பற்றும் அன்பும் கொண்டவர்கள் அதை சிரமம் பாராது செய்து வருகின்றனர். அத்தகைய நேயர்களை முதலில் பாராட்டி பின் நிகழ்ச்சியை வழங்கும் விதம் நேயர்களுக்கு மகிழ்ச்சியை தருவதோடு, கடிதம் எழுதும் ஆர்வத்தை அதிகரிக்கவும் செய்கிறது.
கலை: அடுத்து இலங்கை காத்தான்குடி வ. வசீம் எழுதிய கடிதம். சீன வானொலியின் நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்டு பயனடைந்து வருகிறேன். சீன மண்ணில் பூத்த வானொலியே, தாலாட்டுக்காய் ஏங்கும் குழந்தையான எமக்கு உன் இனிய தமிழே தாலாட்டு. உன் சேவை என்றென்றும் தொடரவேண்டும்..


......................மின்னஞ்சல்........
வளவனூர் புதுப்பாளையம், எஸ்.செல்வம்,
சீன வானொலி இணையதளத்தில், பெய்ஜிங் மாநகரில் நடைபெற உள்ள 2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், இணையத்தில் தீபம் ஏற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதைக் கண்டு பெரிதும் மகிழ்ச்சி அடைந்தேன். ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தி்ல், தீபத்தை ஏந்திச் செல்லும் வாய்ப்பு ஒருபோதும் எனக்கு கிடைக்காது. ஆனாலும், இணையத்தின் மூலம் அந்த வாய்ப்பை சீன வானொலி தமது நேயர்களுக்காக ஏற்பாடு செய்திருப்பதை அறிந்து பெரிதும் மகிழ்ச்சி அடைந்தேன். உடனடியாக, நானும் இந்த நடவடிக்கையில் கலந்து கொண்டு, இணையத்தின் வழியாக ஒலிம்பிக் தீபத்தை நானும் எனது குடும்பத்தினரும் ஏந்தினோம். அப்போது, தீபத் தொடரோட்டத்தில் கலந்து கொண்டது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. இந்த அரிய வாய்ப்பை தந்த சீன வானொலிக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


திமிரி, எஸ். அபிராமி
சீனா‌வின் சாங்சென் நக‌ரில் சுமார் 20ல‌ட்ச‌ம் சதுர‌ கிலோ மீட்ட‌ர் ப‌ர‌ப்ப‌ள‌வில், யாங்சி ஆற்ற‌ங்க‌ரை ஓர‌ம் அமைந்துள்ள‌ உய‌ர்நிலை க‌ல்விநிலைய‌ம் ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல் ப‌ய‌ன்மிக்க‌து. இந்த‌ ப‌யிற்சி நிறுவ‌ன‌ம் ந‌ல்ல‌ சுற்றுச் சூழ‌லுட‌ன் அமைந்திருப்ப‌தை எண்ணி ம‌கிழ்கிறேன். இங்கு செய‌ல்ப‌டும் மண்டல‌ அறிவியல் நிலையத்தில், ஐந்து உயர்நிலை தொழிற் பள்ளிகள் செயல் படுகின்றதையும், இங்கு சுமார் 26ஆயிரம் மாணவர்கள் பயிற்சி பெறுவதையும் கேட்டு வியப்பு அடைந்தேன். நல்ல எதிர்காலமிக்க மாணவர்கள் உருவாக்கப்படுவது கேட்டு உளம் மகிழ்கிறேன். ந‌ன்றி!
வளவனூர், முத்துசிவக்குமரன்,
உள்ளத்திலான தீபத்தை ஏற்றுக, உலகிலான நட்பை பரவச் செய்க என்ற முழக்கத்துடன், ஒலிம்பிக் தீபத்தை நமது இணைய தளத்தில் ஏற்றும் போது பரவசமாய் இருந்தது. உலகில் உள்ள அனைவரும் ஒருமித்து, ஓரே குலம் என்ற சகோதரத்துவம் கொண்டு, பங்கு கொள்ளும் இந்த மாபெரும் விளையாட்டுத் திருவிழாவில் நானும் தீபம் ஏற்றினேன் என்று பெருமிதம் கொள்ள வைத்த சீன வானொலிக்கு நன்றிகள் பல.
மதுரை 20, N. இராமசாமி
திபெத் பிரச்சனை பற்றி கடல் கடந்து வாழும் சீனர்களின் மன உணர்வினை அறிந்து கொண்டேன். அவர்கள் திபெத் சுதந்திரவாதிகளின் வன்செயல்களை கண்டித்ததோடு சீனாவிற்கு தக்களுடைய உளமார்ந்த ஆதரவை வெளிப்படுத்தி உள்ளனர். பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தினை சீர்குலைக்க முயலும் தலாய் லாமா குழுவினர்களை அவர்கள் வன்மையாக கண்டித்து உள்ளனர்.
டாக்டர் ஆர்.ராஜ்குமார், மதுரை-20.
சீனாவில் 2200ஆண்டுகள் சிறப்பு வரலாறு உடைய ஹாங்சோவின் மூலம் முற்கால சீனாவின் பண்பாட்டை அறிந்து கொண்டேன். இதில் மிகவும் அழகான நகரமான ஹாங்சோவின் கிஃபேக்
வீதி உசான் மலையின் கீழ் உள்ளது. இது உலகவரலாறு மற்றும் பண்பாட்டு மரபுச் செல்வ பட்டியலில்
சேர தகுதியுள்ளது. முற்காலத்தில் இந்நகரம் கோலாகலமாக இருந்தது என்றும் இப்பொது ஒருசில கட்டிடங்கள் உள்ளன என்பதை தெரிந்து கொண்டேன். இத்தகைய சிறந்த நகரம் சீனாவின் புகழுக்கு மகுடம் வைத்தது போல் அமைந்து உள்ளது.