• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-07 09:06:14    
ஒலிம்பிக விளையாட்டு போட்டி நுழைவுச்சீட்டு

cri
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் 3வது கட்ட நுழைவுச்சீட்டு விற்பனைப் பணி இன்று அதிகாரப்பூர்வமாக துவங்கியது. ஒலிம்பிக் நுழைவுச்சீட்டு விற்பனை மையத்தின் புள்ளிவிபரங்களின் படி, இன்று நண்பகல் வரை, ஆடவர் கால் பந்து விளையாட்டின் இறுதி மற்றும் அரை இறுதி போட்டி, ஆடவர் 110 மீட்டர் தடையோட்ட போட்டி, ஆடவர் கூடைப்பந்து தேர்வாட்டம் முதலிய 8 விளையாட்டுகளின் நுழைவுச்சீட்டு விற்பனைப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

3வது கட்ட நுழைவுச்சீட்டு விற்பனைப் பணியில் 13 இலட்சத்து 80 ஆயிரம் ஒலிம்பிக் நுழைவுச்சீட்டுகள் விற்பனை செய்யப்படும் என்று பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் குழு அறிவித்தது.
2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி வெற்றி பெறுவது உறுதி. சீன மக்களுக்கு இது முன்னேற்றத்தை வழங்கும். சீனாவிலுள்ள போலந்து தூதர் Krzysztof Szumski இன்று நடைபெற்ற போலந்து தேசிய விழா விருந்தில் இவ்வாறு தெரிவித்தார்.
ஒலிம்பிக் விளையாட்டு போட்டி உலக மக்களின் முக்கிய விழாவாகும். பல்வேறு

நாட்டு வீரர்களுக்கிடையிலான ஒத்துழைப்பை இது மேலும் வலுப்படுத்தும் என்று Szumski தெரிவித்தார். அடுத்த ஆண்டு சீனாவும் போலந்தும் தூதாண்மை உறவை நிறுவிய 60வது ஆண்டு நிறைவாகும். தொடர்புடைய கொண்டாட்ட நடவடிக்கைகள் இரு நாட்டுறவு மற்றும் நட்பு ஒத்துழைப்பின் வளர்ச்சிக்கு துணை புரியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ருமேனிய தலைவர்கள் மற்றும் மக்கள், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு ஆதரவு அளித்து, விளையாட்டை அரசியல் மயமாக்குவதை எதிர்ப்பதை தாம் உயர்வாக பாராட்டுவதாக சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் துணைத்

தலைவர் Chen Zhili அம்மையார் இன்று தெரிவித்தார்.
இன்று பெய்சிங்கில் ருமேனிய பிரதிநிதிகள் அவையின் தூதாண்மை கொள்கை கமிட்டியின் தலைவர் Stefen Glavan தலைமையிலான ருமேனிய பிரதிநிதிக் குழுவைச் சந்தித்துரையாடிய போது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இரு நாட்டுறவின் வளர்ச்சியை மேலும் முன்னேற்றும் வகையில், இரு நாட்டு சட்டமியற்றல் நிறுவனங்கள், பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று Chen Zhili அம்மையார் தெரிவித்தார்.