Sahya Monastery கோயிலின் செப்பனிடும் பணி
cri
Sahya புத்த மதக் கோயிலின் செப்பனிடும் பணி அண்மையில் மீண்டும் துவங்கியுள்ளது. திபெத்தில் 3 முக்கிய தொல் பொருள் பாதுகாப்பு திட்டப்பணிகளில் இது ஒன்றாகும். திபெத்தில் கடுமையான வானிலை நிலைமையால், குளிர்காலத்தில் இப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டியிருந்தது என்று தெரிய வருகின்றது. 1073ம் ஆண்டு இக்கோயில் கட்டியமைக்கப்பட்டப் பின், இதனைச் செப்பனிடும் மிக பெரிய அளவிலான பணி இதுவாகும். மொத்த முதலீட்டுத் தொகை 8 கோடியே 66 இலட்சம் யுவானை எட்டியுள்ளது.
|
|