மார்ச் 14ம் நாள் லாசா நகரில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களால் ஏற்பட்ட பாதிப்பை வெகு விரைவில் நீக்கி, ஜூன் திங்கள் பிற்பகுதியில் திபெத் அந்நிய பயணிகளை வரவேற்கத் துவங்க திபெத் அரசு பாடுபடும் என்று திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைவர் Qiangba Puncog அண்மையில் கூறினார்.
வன்முறைச் சம்பவங்கள், திபெத்தில் சுற்றுலா துறையின் வளர்ச்சியை பாதித்தன. இருப்பினும், இவ்வாண்டு முதல் 3 திங்களில், திபெத்தின் பொருளாதார வளர்ச்சி அடிப்படையில் சீராகவும் விரைவாகவும் வளர்ந்தது.
மதிப்பீட்டின் படி, இவ்வாண்டு முதல் மூன்று திங்களில் திபெத்தின் உற்பத்தி மதிப்பு, கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 10.4 விழுக்காடு அதிகமாகும். உள்ளூர் விவசாயிகளின் நிதி வருமானம் கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 12.8 விழுக்காடு அதிகமாகும்.
|