
கடந்த மே முதல் நாள், உலக உழைப்பாளிகளின் நாளாகும். இதைக் கொண்டாடும் வகையில், சீன அரசு 3 நாள் விடுமுறையை அறிவித்துள்ளது. இந்த 3 நாளில், மக்கள் பலர் சுற்றுப் பயணம் மேற்கொள்வது வழக்கம். சுற்றுலா செல்ல விரும்புவோருக்கு உதவும் வகையில், இங்கு சில ஆலோசனைகளை வழங்குகிறோம்.

Qing long பள்ளதாக்கு, Hong luo கோயில், Yan xi ஏரி, Yun meng மலை, Miyun நீர் தேக்கம் ஆகியவை சிறந்த சுற்றுலா பிரதேசங்களாகும். அவை, பெய்சிங்கிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. அவை, தேசிய AAAA தர நிலை சுற்றுலா பிரதேசமாகும். நீண்டகால வரலாறு மற்றும் பண்பாடு, விநோதமான நிலவியல் சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை ஆகிய காரணங்களால், அவை, சிறந்த சுற்றுலா பிரதேசங்களாகும்.
 சிறப்பு முன்மொழிவுகள்: தங்கு விடுதி:அறையை முன்பதிவு செய்ய வேண்டும்.. தங்கு விடுதி, சுற்றுலாவின் முக்கியப் பகுதியாகும். எனவே, அறையை முன்பதிவு செய்தால், பயணக் கட்டணத்தைக் குறைக்கலாம்.
|