2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கின் தீபம் ஜொல்மோ லுங்மா சிகரத்தின் உச்சியை இன்று வெற்றிகரமாக அடைந்தது. ஒலிம்பிக் வரலாற்றில், கடல் மட்டத்திலிருந்து 8844.43 மீட்டர் உயரமான உலகின் மிக உயரமான ஜொல்மோ லுங்மா சிகரத்தை ஒலிம்பிக் தீபம் எட அடைவது, இதுவே முதன் முறையாகும்.
இன்று நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத்தொடரேட்டம் ஜொல்மோ லுங்மா சிகரத்தை அடையும் நடவடிக்கையில், சீனாவின் மலையேற்றும் அணியின் 12 வீரர்கள் விடியற்காலை, கடல் மட்டத்திலிருந்து 8300 மீட்டர் உயரமான முகாமிலிருந்து தீபத்தோடு நோக்கி புறப்பட்டு, ஜொல்மோ லுங்மா சிகரத்தின் உச்சியை ஏறத் தொடங்கினர். பெய்ஜிங் நேரபடி, ஏறக்குறைய காலை 9:10 மணிக்கு, தீப ஏந்திய நபர், ஜொல்மோ லுங்மா சிகரத்தின் உச்சியில், ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தை நிறைவேற்றினர்.
இச் சிகரத்தின் உச்சியை, ஒலிம்பிக் தீபம் அடைவது, பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டி தீபத் தொடரேட்டத்தின் சிறப்புக்களில் ஒன்றாகும். இது, ஒலிம்பிக் போட்டியை நடத்த விண்ணப்பித்த போது, சர்வதேசச் சமூத்த்துக்குச் சீன அளித்த வாக்குறுதியுமாகும்.
|