
 அண்மையில் குவாங்துங் மாநிலத்தின் குவாங்ஷோ நகரைச் சேர்ந்த சியன் என்பவர் தீயணைப்புதுறையினருக்கு அவசரமாய் தொலைபேசி செய்து தனக்கு உதவுமாறு அழைத்துள்ளார். வீட்டில் தீயேதும் ஏற்பட்டதா என்றால், நிச்சயம் இல்லை. தீ எரியாவிட்டாலும், நீங்காமல் ஒட்டிக்கொண்ட மோதிரத்தால் அவருக்கு விரல்தான் எரிந்தது. தனது தாயார் 23 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த மோதிரத்தை கழட்டாமல் அணிந்துகொண்டிருந்த சியனுக்கு தற்போது வயது 56. மெலிந்த 33 வயதில் அணிந்த மோதிரம் அவர் காலப்போக்கில் பருமனனாதால் விரலின் தோலை கிழிக்க ஆரம்பித்து சதைக்குள் நுழையும் நிலை ஏற்பட்டது. உள்ளூர் மருத்துவமனையின் மருத்துவர்களிடம் உதவி நாடி பயனில்லாமல் தீயணைப்புத்துறையிடம் உதவி நாடினார் சியன். பின் 3 நிமிடம் முயற்சியில் சில நுட்பமான கருவிகளைக் கொண்டு தீயணைப்புத்துறையினர் மோதிரத்தை அகற்றினராம். விரலுக்கேற்ற வீக்கம் மட்டுமல்ல விரலுக்கேற்பத் தான் மோதிரமும்.
|