
2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கின் தீபம் ஜொல்மோ லுங்மா சிகரத்தின் உச்சியை இன்று வெற்றிகரமாக அடைந்தது. ஒலிம்பிக் வரலாற்றில், கடல் மட்டத்திலிருந்து 8844.43 மீட்டர் உயரமான உலகின் மிக உயரமான ஜொல்மோ லுங்மா சிகரத்தை ஒலிம்பிக் தீபம் எட அடைவது, இதுவே முதன் முறையாகும்.

இன்று நடைபெற்ற ஜொல்மோ லுங்மா சிகரத்திலான பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத்தொடரோட்ட நடவடிக்கையில், சீன மலையேற்றும் அணியின் 12 வீரர்கள் விடியற்காலை மூன்று மணிக்கு, கடல் மட்டத்திலிருந்து 8300 மீட்டர் உயரமான முகாமிலிருந்து புறப்பட்டுச் சென்று, ஜொல்மோ லுங்மா சிகரத்தின் உச்சியை நோக்கி ஏறத் தொடங்கினர். பெய்ஜிங் நேரப் படி, காலை 9:18 மணி அளவில், ஜொல்மோ லுங்மா சிகரத்தின் உச்சியை அடந்து ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்நடவடிக்கை வெற்றி பெற்ற பின், சீன துணை அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் சீன மலையேற்றும் அணிக்கு செய்தி அனுப்பினார். அதில் அவர்கள் தடையின்றி ஜொல்மோ லுங்மா சிகரத்தின் உச்சியை அடந்ததற்கு வாழ்த்து தெரிவித்தார். ஒலிம்பிக் தீபம் ஜொல்மோ லுங்மா சிகரத்தில் பெருஞ்சுவாலையுடன் எரிபவது, ஜொல்மோ லுங்மா சிகரத்தின் பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத்தொடரோட்டப் பணி வெற்றி பெற்றதன்ச் சின்னமாக இருக்கிறது. இது ஒலிம்பிக் வரலாற்றில் ஒரு பெருமையான செயலாகும். ஒலிம்பிக் விளையாட்டுக்கும், முழு மனித குலத்துக்கும் சீன மக்கள் வழங்கிய மதிப்புள்ள அன்பளிப்புப் பொருளும் ஆகும் என்று செய்தி கூறுகிறது.

இச் சிகரத்தின் உச்சியை, ஒலிம்பிக் தீபம் அடைவது, பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டி தீபத் தொடரேட்டத்தின் சிறப்புக்களில் ஒன்றாகும். இது, ஒலிம்பிக் போட்டயை நடத்த விண்ணப்பித்த போது, சர்வதேசச் சமூத்த்துக்குச் சீன அளித்த வாக்குறுதியுமாகும்.
|