பெய்சிங் உள்ளிட்ட ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை நடைபெறும் சீனாவின் 6 நகரங்கள், ஒலி்ம்பிக் பற்றிய மருந்துகள் மற்றும் மருத்துவ வசதிகளுக்கான யதார்த்த பாதுகாப்பு நடவடிக்கைகளை வகுத்துள்ளன.
சீனத் தேசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துக்கான கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் Yan Jiangying அம்மையார் இன்று பெய்சிங்கில் இவ்வாறு தெரிவித்தார்.
மேற்கூறிய பிரதேசங்களில் ஒலி்ம்பிக் பற்றிய மருந்துகளுக்கான பாதுகாப்பான விநியோகத்தை உத்தரவாதம் செய்வதோடு, தொடர்புடைய மருந்துகளின் வகைகளுக்கு இந்நடவடிக்கைகள் உத்தரவாதம் அளிக்கும். தவிரவும், ஊக்கமருந்துக்கான கண்காணிப்புப் பணியும் வலுப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
|