பெய்சிங் ஒலிம்பிக் தீபம் இன்று உலகின் மிக உயரமான சிகரமான ஜொல்மோ லுங்மா சிகரத்தின் உச்சியை வெற்றிகரமாக எட்டியது. இந்தியாவின் ஆசிய செய்தி நிறுவனம், இந்திய Times முதலிய இந்தியாவின் முக்கிய செய்தி ஊடகங்கள் காலதாமதமின்றி இதை அறிவித்தன.
8 திபெத் இன மக்கள் உள்ளிட்ட 10க்கு மேலான தீபமேந்தும் நபர்கள் இன்று ஜொல்மோ லுங்மா சிகரத்தின் உச்சியை அடைந்தனர். சிகரத்தின் உச்சியில் சீன நாட்டுக்கொடி, சர்வதேச ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் கொடி, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் கொடி ஆகியவற்றை அவர்கள் உயர்த்தி, உலகின் பார்வையாளருக்கு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான அருமையான வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்று இந்திய ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.
இந்திய Times அதன் இணைய தளத்தில் வெளியிட்ட கட்டுரையில், ஒலிம்பிக் தீபம் ஜொல்மோ லுங்மா சிகரத்தின் உச்சியை வெற்றிகரமாக எட்டியமை பெய்சிங் ஒலிம்பிக் தீபத்தொடரோட்டத்தை ஒரு உச்ச நிலையை அடைச் செய்தது. இது, நடைபெறவுள்ள பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான சீனாவின் நம்பிக்கையை கோடிட்டுக்காட்டியது என்று குறிப்பிட்டது.
|