2008 பெய்ஜிங் ஒலிம்பிக் மற்றும் ஊனமுற்றோர் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஆயத்தப் பணிகள், முக்கிய கடைசி கட்டத்தில் நுழைந்துள்ளன. அதற்கு உதவி புரியும் பல்வேறு நகரங்கள், பணிகளை வலுப்படுத்தி, ஒலிம்பிக்கிற்கான ஆயத்தங்களையும் கடைசி கட்டத்தின் பல்வேறு பணிகளையும் கூட்டாக மேற்கொள்ள வேண்டும் என்று சீன துணை அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் வலியுறுத்தினார். நேற்று ச்சிங் தாவ் நகரில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் பெய்ஜிங்கின் வெளியேயுள்ள போட்டிப் பிரதேசங்களிலுள்ள ஆயத்தப் பணி பற்றிய கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
தற்போது, பல்வேறு ஆயத்தப் பணிகள் தங்குதடையின்றி நடைபெறுகின்றன. மென்பொருள் மற்றும் வன் பொருள் நிலைமைகள், அடிப்படையில் வரையறைக்குப் பொருந்தியுள்ளன. அவை எல்லாம், தனிச்சிறப்பு வாய்ந்த, உயர் நிலையான பெய்ஜிங் ஒலிம்பிக் மற்றும் ஊனமுற்றோர் ஒலிம்பிக் போட்டிகளை வெற்றிகரமாக நடத்துவதற்கு உறுதியான அடிப்படையை உருவாக்கியுள்ளன என்று அவர் கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.
பெய்ஜிங் ஒலிம்பிக்கில் பேட்டி காண்கின்ற செய்தியாளர்களின் எண்ணிக்கை, அதிகமானது. வெளிநாட்டு ஊடகங்களின் செய்தியாளர்களுக்கான சேவை மற்றும் மேலாண்மைப் பணியை உயர் வரையறையாகவும், உயர் தரமாகவும் செய்வது, மிக முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.
|