• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-09 10:47:35    
ஜொல்மோ லுங்மாவில் பெய்ஜிங் ஒலிம்பிக் தீபம்

cri
பெய்ஜிங் ஒலிம்பிக் தீபம், நேற்று ஜொல்மோ லுங்மா சிகரத்தின் உச்சியை வெற்றிகரமாக அடைந்தது. கடல் மட்டத்திலிருந்து 8844.43 மீட்டர் உயரமுள்ள உலகின் மிக உயரமான சிகரமான ஜொல்மோ லுங்மாவில் ஒலிம்பிக் தீபம் சென்றடைந்தது, இதுவே முதல் முறை. itar-tass செய்தி நிறுவனம், இந்தியாவின் ஆசிய செய்தி நிறுவனம் முதலிய உலகின் பல்வேறு நாடுகளின் முக்கிய செய்தி ஊடகங்கள், நேற்று இது பற்றி, செய்திகள் வெளியிட்டன.

8 திபெத் இன மக்கள் உள்ளிட்ட 10க்கு மேலான தீபமேந்தும் நபர்கள் நேற்று ஜொல்மோ லுங்மா சிகரத்தின் உச்சியில் ஏறினர். அங்கு, சீன தேசியக்கொடி, சர்வதேச ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் கொடி, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் கொடி ஆகியவற்றை அவர்கள் ஏற்றி, உலக பார்வையாளருக்கு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான அருமையான வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்று இந்திய ஆசிய செய்தி நிறுவனம் கூறியது. இச்செயல், பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டப் நடவடிக்கையில் உயர் நிலையாகும். இது, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான சீனாவின் நம்பிக்கையைக் காட்டியது என்று இந்திய Times நாளேட்டின் இணையம் கட்டுரையில் கூறியது.

மாசுபாடற்ற ஒலிம்பிக், தொழில் நுட்ப ஒலிம்பிக், மானிட வளமுள்ள ஒலிம்பிக் என்ற பெய்ஜிங் ஒலிம்பிக்கின் கருத்தை, ஜொல்மோ லுங்மாவில் ஒலிம்பிக் தீபம் ஏறி, முழுமையாக வெளிப்படுத்தியுள்ளது என்று சிங்கப்பூரின் ஆசிய செய்தி இணையம், பிரேசிலின் உலக ரீதியான இணையம், ஆஸ்திரேலியாவின் மக்கள் பத்திரிகை முதலிய முக்கிய செய்தி ஊடகங்களும் செய்தி வெளியிட்டன.

Tiar-tass செய்தி நிறுவனம் உள்ளிட்ட ரஷியாவின் முக்கிய செய்தி ஊடகங்களும், ஒலிம்பிக் தீபம் ஜொல்மோ லுங்மா சிகரத்தின் உச்சியை அடைந்ததும் செய்தி வெளியிட்டன. ஒலிம்பிக் தீபம், ஜொல்மோ லுங்மா சிகரத்தின் உச்சியை அடைந்தது, பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நடவடிக்கைக்கு, மிகுந்த பெருமை சேர்த்தது என்று அது கூறியது.