பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம், இன்று காலை 9 மணிக்கு Guangdong மாநிலத்தில் huizhou நகரத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இன்று காலை 8 மணிக்கு, huizhou நகர விளையாட்டு அரங்கத்தின் சதுக்கத்தில் இந்நடவடிக்கை துவங்கியது. சுமார் 3 ஆயிரம் பொது மக்கள் கைதட்டி, ஆரவாரம் செய்த நிலையில் முதலாவது தீபமேந்துபவரான, புகழ் பெற்ற நீச்சல் வீரர் chenxiujun, இச்சதுக்கத்திலிருந்து புறப்பட்டு, ஆயிரம் ஆண்டுகால வரலாறு கொண்ட huizhou நகரத்தில், தொடரோட்ட நடவடிக்கையைத் துவக்கினார்.
208 தீபமேந்துபவர்களின் தொடரோட்டத்துக்குப் பின், இன்று பிற்பகல், huizhou நகரத்திலான தீபத் தொடரோட்ட நடவடிக்கை முடிந்தது. பின், ஒலிம்பிக் தீபம் Guangdong மாநிலத்திலுள்ள shantou நகரை சென்றடையும்.
|