• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-09 16:50:16    
11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் luo ba இனத்தைச் சேர்ந்த பிரதிநிதி xiao hong

cri

luo ba இனம், சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள linzhi பிரதேசத்தில் முக்கியாகப் பரவியுள்ளது. அதன் மக்கள் தொகை ஏறக்குறைய 3000 ஆகும். xiao hong அம்மையார் என்ற ஒருவர் தான், இச்சிறுபான்மை தேசிய இனமக்களின் சீனத் தேசிய மக்கள் பேரவை பிரதிநிதி ஆவார். மார்ச் திங்கள், தேசிய மக்கள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட போது, சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவ், அவருடன் அன்பாக உரையாடினார். 

ஹுசிந்தாவ்: இப்போது, na yi luo ba ஊரிலிருந்து மாவட்ட நகருக்குச் செல்லும் சாலை கட்டி முடிக்கப்பட்டுவிட்டதா ?

xiao hong: ஆம், கட்டி முடிக்கப்பட்டுவிட்டது.

ஹுசிந்தாவ்: ஊரிலான குழந்தைகள், துவக்கப்பள்ளியில் தேர்ச்சி பெற முடிகிறதா?

xiao hong: ஆமாம். தேர்ச்சி பெறலாம்.

ஹுசிந்தாவ்: ஊரிலான குழந்தைகளைத் துவக்கப் பள்ளியில் தேர்ச்சி பெற்ற பின், மாவட்ட நகரில் இடைநிலைப்பள்ளியில் சேர்க்க முடிகிறதா ?

xiao hong: ஆமாம். இப்போது, இடைநிலைப்பள்ளியில் சேரும் விகிதம் 100 விழுக்காடாக உள்ளது.

ஹுசிந்தாவ்: மாவட்ட நகரில் கல்விபயின்றால் குழந்தைகள், மாணவர் விடுதி வசதியுடைய இடைநிலைப்பள்ளியில் படிக்கின்றார்களா ?

xiao hong: அவர்கள் மாணவர் விடுதியில் தங்கியிருக்கும் வசதியுள்ளது.

ஹுசிந்தாவ்: உறைவிட வசதியுடைய இடைநிலைப்பள்ளி படிக்கின்ற மாணவர்களுக்கான வாழ்க்கை உதவி தொகை வழங்கப்பட்டுகிறதா ?

xiao hong: அது வழங்கப்படுகிறது. உணவுகள், உறைவிடம், கல்விக் கட்டணம் ஆகியவையும் இலவசமே.

சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவ், அவரைச் சந்தித்துப்பேசிய போது, அவர் உணர்ச்சி வசப்பட்டார். அவர், 470 கிராமவாசிகள் கொண்ட ஊரின் தலைவர் ஆவார். அவரது அயரா முயற்சிகளால், பொது மக்களின் பல நடைமுறை இன்னல்களை அவர் தீர்த்துள்ளார். அதனால் அந்த ஊரில் அவர் புகழ் பெற்றுள்ளார். இவ்வாண்டு 33 வயதான xiao hong, சீனத் தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதியாக 2வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 5 ஆண்டுகளுக்கு முன்பு, சீனத் தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதியாக முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது இருந்த உணர்வுகள் பற்றி அவர் கூறியதாவது

அப்போது, நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அத்துடன் சீனத் தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதியாகத் தேர்நதெடுக்கப்பட்ட எனது பொறுப்பு முக்கியமானது. பரந்துபட்ட பொது மக்களின் விருப்பங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும். சீனத் தேசிய மக்கள் பேரவையின் கூட்டத்தொடரில் உரையாற்றிய போதும், நான் பதட்டமாக இருந்தேன். இப்போது அப்படி இல்லை. கடப்பாட்டினை நிறைவேற்றுவதைப் பற்றி, நான் மேன்மேலும் நன்கு தெரிந்து வைத்திருக்கிறேன். முன்மொழிவுகளை முன்வைப்பதற்கு நான் தயார் செய்திருக்கின்றேன் என்றார் அவர்.

சிறுபான்மை தேசிய இனப் பிரதேசங்களின் மீதான சீன அரசின் பாதுகாப்பாலும் ஆதரவாலும் xiao hong, தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதியாக இரண்டாம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.. சொந்த தேசிய இன மக்களின் பயனையும் தேவையையும் மேலும் நன்கு வெளிப்படுத்தும் வகையில், இவ்வாண்டு அவர் முழுமையாக ஏற்பாடுகளைச் செய்திக்கின்றார். அவர் கூறியதாவது

அன்றாட நாட்களில் அடிக்கடி சந்திக்கின்ற சில பிரச்சினைகளைப் பற்றி, நான் தயார் செய்திருக்கின்றேன். குறிப்பாக, பொது மக்கள் கருதுகின்ற இன்னல் வாய்ந்த பிரச்சினைகள் பற்றி, நான் தயார் செய்திருக்கின்றோம். எடுத்துக்காட்டாக, சாலைக் கட்டுமானம், மாணவர் கல்வி மற்றும் பொது மக்கள் வாழ்க்கையில், சந்திக்கின்ற இன்னல் வாய்ந்த பிரச்சினைகள் ஆகியவை பற்றி, சொந்த பணி நடைமுறையடன் இணைத்து, தயார் செய்திருக்கின்றேன். என்றார் அவர்.

Xiao hong, உள்ளூர் நிலைமையின் கள ஆய்வில் கவனம் செலுத்துகிறார். உள்ளூர் விவசாயிகளும் ஆயர்களும் பொது அக்கறை கொண்ட சாலைக் கட்டுமானம், சுற்றுலா மூலவளங்களி்ன் வளர்ச்சி முதலிய பிரச்சினைகளை இயன்றளவில் தீர்க்கும் வகையில், கிராமங்களுக்கு அடிக்கடி செல்கின்றார். தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், Xiao hongயின் பல முன்மொழிவுகள், நடைமுறையாக்கப்பட்டுள்ளன. இப்போது, luo ba பிரதேசத்தில் நெடுஞ்சாலை, மின் விளக்கு, தொலை பேசி இணைப்பு ஆகியவை உண்டு. 90 விழுக்காட்டு பொது மக்கள், விசாலமான வெளிச்சமான புதிய வீடுகளில் குடிபெயர்ந்துள்ளனர். அவர் கூறியதாவது

முன்பு, வீடுகள் மரத்தாலானவை. வெளிச்சமாக இல்லை. ஈரமாகவும் இருந்தன. இப்போது, வீடுகள் கற்களாலும். மாத்தாலும் கட்டப்பட்டவை. குளிர்காலத்தில்,வெதுவெதுபாக உள்ளது. நடுவண் அரசு முன்வைத்த புதிய கிராம கட்டுமானம் என்ற சிறந்த கொள்கைக்கு உள்ளூர் மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.

Luo ba இனத்தவரான xiao hong , Luo ba இன மக்களின் வாழ்க்கையின் மாற்றத்தை அறிந்து கொண்டார். திபெத் lin zhi விமான நிலையம் போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்ட பின், Luo ba இனப் பிரதேசத்தின் தனி சிறப்பு மிக்க தேசிய இனப் பண்பாடும் ஆதிகால வனக்காட்சியும் மேன்மேலும் அதிகமான வெளியூர் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றன. உள்ளூர் விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வருமானமும் அதிகரித்துள்ளது. அவர் கூறியதாவது

கடந்த ஆண்டு மே திங்கள் 28ம் நாள், நாங்கள் luo ba இனப் பண்பாட்டு விழாவை நடத்தினோம். ஒரு நாளில், மூன்று கிராமங்களின் மொத்த வருமானம் 1 இலட்சம் யுவானைத் தாண்டியது. இப்போதும், சில வசதியான குடும்பங்கள், புதிய கிராமத்தின் கட்டுமானத்துடன் இணைந்து, குடும்ப உணவு விடுதிகளை நடத்தி, வெளியூர் சுற்றுலா பயணிகளை உபசரித்து வருகின்றன.

உள்ளூர் பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சி, luo ba இனத்தின் முயற்சி சீன அரசு மற்றும் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் உதவிகளிலிருந்து பிரிக்கப்பட முடியாது. தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட xiao hongயின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும். இக்காலங்களில், தாம், தொடர்ந்து கள ஆய்வு செய்து, உள்ளூர் விவசாயிகள் மற்றும் ஆயர்களின் விருப்பங்களை மேலும் அதிகமாக வெளிப்படுத்தி, அவர்களது அன்றாட வாழ்க்கையின் நடைமுறைப் பிரச்சினைகளைத் தீர்க்க உள்ளதாக xiao hong கூறினார்.