• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-09 09:23:17    
வெளிநாட்டிலான பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம்

cri
ஓமன் வெளிநாட்டு பயணிகளை ஈர்க்க விரும்புகின்ற நாடாகும். ஓமனின் வரவாற்று, நாகரிகம், பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றை வெளியிட ஓமன் மக்கள் விரும்புகின்றனர். தீபத் தொடரோட்டம் ஓமனை வெளிப்படுத்த சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று ஓமன் கருதுகிறது.

தீபத் தொடரோடத்தை பயன்படுத்தி, ஓமன் மக்களின் கனவு படிப்படியாக நனவாக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.
உலக புகழ்பெற்ற சுற்றுலா நகரான பாங்காக், தீபத் தொடரோட்டத்தின் ஈர்ப்பு ஆற்றலை முழுமூச்சுடன் வெளியிட்டது. உலகம், இந்நகரின் அன்பால் ஈர்க்கப்பட்டது. தாய்லந்தின் அழகான இயற்கை காட்சி, ஆழமான பண்பாடு பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை பாங்காக் தீபத் தொடரோட்ட நடவடிக்கை வெளியிட்டது என்று பாங்காக் நகரில் நடைபெற்ற தீபத் தொடரோட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும் பண்பாடு மற்றும் விளையாட்டு விவகாரங்களுக்கு பொறுப்பான துணை தலைவருமான சிரிபாஸ்ராபோன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது—

தாய்லந்து, புன்முறுவல் நாடு என்றழைக்கப்படுகிறது. தாய்லந்து வருகின்ற அனைத்து மக்களும், தாய்லாந்து மக்களின் விருந்தோம்பலை உணர முடியும் என்று தாய்லந்து விரும்புகிறது. தாய்லந்து மக்கள், வெளிநாட்டு நண்பர்களை நன்றாக உபசரிப்பர் என்றார் அவர்
புதிய தோற்றத்தை வெளிக்காட்ட விரும்புகின்ற நாட்டுக்கு, தீபத் தொடரோட்டம், சிறந்த மேடையாகும்.
தீபத் தொடரோட்டம், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் நடைபெற்றது. இதுவே முதன்முறையாகும். துயர் மற்றும் பிளவிலிருந்து மீள முயற்சி செய்யும் நாட்டுக்கு,

தீபத் தொடரோட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. பாகிஸ்தானிலுள்ள சீனத் தூதர் ரோ சாவ் குவெய் கூறியதாவது—
பாகிஸ்தான் அரசுக்கு தீபத் தொடரோட்டம் முக்கிய வாய்ப்பாக அமைந்தது. அரசியல் மாற்ற காலத்தில் பாகிஸ்தான் இருக்கின்றது. சர்வதேச சமூகத்துக்கு, ஆக்கப்பூர்வமான நிதானமான பாகிஸ்தானை வெளிப்படுத்தும் வாய்ப்பு தேவைபட்டது. பெய்ஜிங் ஒலிம்பி்க் அமைப்பு குழு, இஸ்லாமாபாதை தேர்ந்தெடுத்ததற்கு பாகிஸ்தான் அரசு நன்றி தெரிவிக்கிறது. இது, பெருமையாகும் என்று அது கருதுகிறது என்றார் அவர்.

இஸ்லாமாபாத் துவக்க விழாவில், பாகிஸ்தான் அரசு தலைவர் முஷாரப், தலைமை அமைச்சர் கிலானி இருவரும், கூட்டாக தீபம் ஏந்தினர். பாகிஸ்தானின் புதிய துவக்கம் உலகத்துக்கு எடுத்துக்காட்டப்பட்டது.
பாகிஸ்தான் மட்டுமல்ல. பெய்ஜிங் ஒலிம்பிக் தீபம் கடந்து வந்த பல வளரும் நாடுகள், தமது சிறப்புகளை வெளிகாட்டும் வாய்ப்புகளை பெற்றன.
வரலாற்று காரணங்களால், வடகொரியாவுக்கு, உலகம், செவிகொடுக்க வில்லை. பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம், வடகொரியாவுக்கு வாய்ப்பை வழங்கியது.

வடகொரியாவிலுள்ள சீன தூதர் லியு சியாவ் மிங் கூறியதாவது—
வடகொரிய மக்கள் இத்தீபத் தொடரோட்டத்தை எதிர்பார்த்தனர். ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் மூலம், உலகத்துக்கு, வடகொரிய மக்களின் ஆக்கப்பணி சாதனை, அயரா உழைப்பு துணிவு மற்றும் விறுவிறுப்பான நாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர்கள் விரும்பினர் என்றார் அவர்.