தையற் கடையில் மகிழ்ச்சியுடன் வேலையைக் கற்றுக் கொள்பவர் ZHOU XIAO YAN
cri
1980ஆம் ஆண்டுகளுக்கு முன், சீன மக்கள் பொதுவாக தாமாகவே துணியை வாங்கி தையற் கடைக்குச் சென்று தங்களுக்கான ஆடைகளைத் தைப்பது வழக்கம். தற்போது, சந்தையில் ஆயத்த ஆடைகளின் வணிகச் சின்னங்களும் பாணிகளும் செழிப்பாகி வருகின்றன. தையற் கடைக்கு செல்ல விரும்பும் மக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால், ஹாங் சோ நகரிலுள்ள ஒரு துணி சந்தையில், தையற் கடைகளின் வியாபாரம் இன்னமும் விறுவிறுப்பாக இருக்கிறது. இந்தக் கட்டுரையில், தையற் கடையில் பணிப் பயிற்சி பெற்று வரும் செல்வி ZHOU XIAO YAN பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.
ஹாங் சோ நகரிலுள்ள ஒரு துணி சந்தையில், துணிப் பொருட்கள் மேசைகளில் ஒழுங்காக வைக்கப்பட்டுள்ளன. துணிப் பொருட்களுக்குப் பின், தையற் கடைகள் அமைந்துள்ளன. HONG YE தையற் கடை அவற்றில் சாதாரண ஒன்றாகும். இளம் செல்வி ZHOU XIAO YAN இக்கடையில் பணிப் பயிற்சி பெற்று வருகிறார். அவர் கூறியதாவது— "இக்கடையின் சிறு சிறு வேலைகளில் ஈடுபடுகின்றேன். முன்பதிவுப் படிவங்களை ஏற்றுக் கொள்வது, அளவெடுப்பது, திருத்துவது, பொத்தானை(button) தைப்பது ஆகிய பணிகளுக்குப் பொறுப்பேற்கின்றோம். ஆடைகளை விரும்புவதால், இங்கே நான் மகிழ்ச்சி அடைகின்றேன்" என்றார் அவர். ZHOU XIAO YANனின் தையல் இயந்திரத்துக்கு அருகில் நாகரீக இதழ்கள் அதிகமாக உள்ளன. வாடிக்கையாளருக்கு வசதி வழங்கும் வகையில், இந்த இதழ்களிலான ஆடை வடிவமைப்பு பற்றியும், அலங்காரப் பொருட்களை வேறுபட்ட ஆடைகளுடன் இணைந்து பயன்படுத்தும் நுட்பம் பற்றியும் ஆய்வு செய்ய தாம் விரும்புவதாக அவர் கூறினார். பல வாடிக்கையாளர்கள் ஆடை இதழ்களில் தாங்கள் விரும்பும் பாணியைக் கண்டு, தொடர்பான படங்களை தையற் கடைக்கு கொண்டு வந்து, தையற்காரரை தயாரிக்கச் செய்கின்றனர். பேரங்காடியில் விற்கப்பட்ட ஆடைகளுடன் ஒப்பிடுகையில், இந்த
ஆடைகளின் தனிச்சிறப்பு தெளிவாக உள்ளது. வாடிக்கையாளரின் உடலுக்கு மேலும் பொருத்தமாக உள்ளது என்று ZHOU XIAO YAN அறிமுகப்படுத்தினார். ஆடை பாணி அவ்வளவு சிக்கலானதாக இல்லை என்றால், தாம் வேலை செய்யும் கடையில் தயாரிக்கலாம் என்றும் அவர் கூறினார். "எமது கடையின் வாடிக்கையாளரில், 20 வயதளவிலான மாணவர்களும், நடுத் தர வயதானவர்களும் இருக்கின்றனர். அந்நியர்களும் உள்ளனர். அவர்களில் சிலர் மற்றவரின் அறிமுகத்தின்படி வருகின்றனர். சிலர் எமது கடையில் தாங்கள் விரும்பும் பாணியைக் கண்டு ஆடையைத் தயாரிக்கச் செய்கின்றனர்" என்றார் ZHOU XIAO YAN. ஆடைகளின் துணி, பாணி, தயாரிப்பு முதலியவற்றின் மீது வேறுபட்ட வாடிக்கையாளர்கள் வேறுபட்ட கோரிக்கைகளைக் கொண்டுள்ளனர். வேலையில் அதிகமான அனுபவங்களைப் பெற்ற பின், ஆடை பாணியின் வளர்ச்சிப் போக்கு பற்றி ZHOU XIAO YAN தெளிவாக தெரிந்து கொண்டுள்ளார். கடை வாசலின் வெளியே தற்போது வரவேற்கப்பட்ட அம்சங்கள் கொண்ட சில ஆடைகளை அவர் தொங்கவிட்டார். வாடிக்கையாளர்களின் கவனத்தை இது அதிகமாக ஈர்த்துள்ளது. ZHOU XIAO YAN சேர்ந்த தையற் கடையில் தயாரிக்கப்பட்ட ஆடைகள் நன்றாக உள்ளன என்று வாடிக்கையாளர் TAN XIAO DE பாராட்டினார். ஹாங் சோ நகரம், சீனாவில் பாரம்பரிய துணிகளை உற்பத்தி செய்யும் தளமாகும்.
தற்போது, ஆடை முறைவழியாக்கத்தை வளர்ப்பதற்கு உள்ளூர் அரசு முக்கியத்துவம் தந்துள்ளது. இத்துறையைச் சேர்ந்த தொழிலாளரின் மேற்படிப்புக்காக உள்ளூர் அரசு உதவி நடவடிக்கையை அறிவித்துள்ளது. இந்நடவடிக்கைக்கு ZHOU XIAO YAN வரவேற்பு தெரிவித்தார். மேலும், அடிக்கடி நாகரீக இதழ்களைப் படிப்பதால், தனக்கு சில எண்ணங்கள் உருவாகியுள்ளன என்று ZHOU XIAO YAN கூறினார். பக்குவம் அடையாத இந்த எண்ணங்களை அவர் ஒரு சிறிய குறிப்புப் புத்தகத்தில் வரைந்து வைத்துள்ளார். ஓய்வு நேரத்தில் அவர் தனது புத்தகத்தை ஆய்வு செய்து திருத்துகிறார். எதிர்காலத்தில் சிறப்புத் துறையின் சான்றிதழைப் பெற்ற பின், ஆடைக் கடை ஒன்றை திறந்து வைத்து, தாமாகவே ஆடைகளை வடிவமைத்து தயாரிக்க உள்ளதாக அவர் கூறினார். ஒரு நாள், தாம் வடிவமைத்து தயாரித்த ஆடையை மற்றவர் அணிவதைக் கண்டு, ஈடிணையற்ற மகிழ்ச்சி அடைய உள்ளதாகவும் ZHOU XIAO YAN தெரிவித்தார்.
|
|