• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-09 18:12:04    
திபெத்தின் நேற்றும் இன்றும் எனும் கண்காட்சி

cri

திபெத்தின் நேற்றும் இன்றும் எனும் கண்காட்சி பெய்ஜிங்கில் நடைபெற்று வருகின்றது. மிகப் பல பதிவேடுகள், ஆவணங்கள், தொல் பொருட்கள், படங்கள் முதலியவற்றின் மூலம், 1959ம் ஆண்டுக்கு முந்தைய திபெத்தில் அரசியலையும் மதத்தையும் ஒன்றிணைக்கும் நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறையின் பின்தங்கிய நிலைமை பற்றி மக்களுக்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அதேவேளையில், தற்போது, திபெத் பெற்றுள்ள முன்னேற்றமும் வளர்ச்சியும் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டன.

திபெத்தின் வரலாறு பற்றிய கண்காட்சி பகுதியில், பழைய திபெத்தில் ஆட்சியாளர்கள் பண்ணை அடிமைகளுக்குத் தண்டனை விதித்தப் போது பயன்படுத்திய சித்திரவதைக்கான கருவிகளையும் அது தொடர்பான படங்களையும் காணலாம். பழைய காலத்தில், கண்களை நீக்குவது, காது, கால், கை ஆகியவற்றை வெட்டுவது முதலியவற்றின் மூலம் பண்ணை அடிமைகள் தண்டிக்கப்பட்டனர். அந்த பொருட்கள் மற்றும் படங்கள் பழைய திபெத்தில் பண்ணை அடிமைகளின் சமூக தகுநிலையையும் வாழ்க்கை நிலைமையையும் மக்களுக்கு மீண்டும் எடுத்துக்காட்டுகின்றன. Zhou chang feng எனும் பார்வையாளர் கூறியதாவது
பழைய திபெத்தில், பின்தங்கிய சமூக அமைப்புமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆகையால், உற்பத்தி ஆற்றல் மிக தாழ்ந்த நிலையில் இருந்தது. பண்ணை அடிமைகளின் வாழ்க்கை மிகவும் துயரமானது. தங்கும் வசதி, விளை நிலம் முதலியவை அவர்களுக்கு கிடைக்கவில்லை. குற்றவாளிகளைப் போல் வசித்தனர். 1965ம் ஆண்டு இந்த வரலாறு பற்றிய ஒரு பண்ணை அடிமையின் கதையைக் கேட்டேன். அவர் தனது கதையை கூறிய போது கண்ணீர் விட்டு அழுத்தார் என்றார் அவர்.
பழைய திபெத்தில், பண்ணை அடிமைகள் இடைவிடாமல் உழைக்க நிர்பந்திக்கப்பட்டனர். இது மட்டுமல்ல, திரும்பி கொடுக்க இயலாத கடன் சுமையையும் அவர்கள் ஏற்க வேண்டியிருந்தது. ஒரு பண்ணை அடிமை இறந்தால், அவர் வசித்த ஊரிலுள்ள அனைவரும் அவருக்காக கடனை திருப்பி கொடுக்க வேண்டும். 50 ஆண்டுகளுக்கு முந்திய திபெத்தின் சமூக நிலைமை, மத்திய கால ஐரோப்பாவில் இருந்த நிலைமையைப் போனது என்று பார்வையாளர் yang qi zhi அம்மையார் கூறினார். இது கால வளர்ச்சியின் கண்ணோட்டத்துக்கு பொருந்தாதது. ஆனால், தலாய் லாமா இதை மீட்க விரும்புகின்றார். yang qi zhi அம்மையார் கூறியதாவது

தலாய் லாமா பழங்கால ஆட்சியை மீட்கும் வகையில், திரும்ப விரும்புகின்றார். மதம் என்பது மதம் மட்டுமே. அரசியல் அரசியல் மட்டுமே. மதத் தலைவர் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று கருதுகின்றேன். தற்போது, தலாய் லாமா மதத் தலைவராக மட்டுமல்ல அரசியல் துறவியாகவும் மாறியுள்ளார் என்றார் அவர்.
திபெத்தின் வரலாற்றைத் தவிர, 1959ம் ஆண்டு திபெத்தில் ஜனநாயகச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டப் பின், குறிப்பாக சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி மேற்கொள்ளப்பட்ட பின், நடுவண் அரசின் ஆதரவில், திபெத்தில் சமூக மற்றும் பொருளாதார துறைகளில் பெறப்பட்டுள்ள மாபெரும் சாதனைகள் இக்கண்காட்சியில் காண்பிக்கப்பட்டன. Yi bo எனும் தொழிலாளர் சின்காய் திபெத் இருப்புப் பாதை மற்றும் லாசா தொடர்வண்டி நிலையத்தின் கட்டுமானத்தில் ஈடுபட்டவராவார். கடந்த சில ஆண்டுகளில், திபெத்தில் நிகழ்ந்த மாற்றத்தை அவர் நேரில் கண்டுள்ளார். அவர் கூறியதாவது
சின்காய் திபெத் இருப்பு பாதையின் கட்டுமானத்தில் கலந்து கொண்டேன். லாசா தொடர் வண்டி நிலையத்தின் கட்டுமானத்திலும் ஈடுபட்டிருந்தேன். இது ஒரு அழகான இருப்புப்பாதையாகும். அறிவியல் தொழில் நுட்பப் பங்கு அதிகம். தொடர் வண்டி பயணம் வசதியாக உள்ளது. தற்போது, திபெத்தின் சுற்றுலா துறையின் வருமானம் சில ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட ஒரு மடங்கு அதிகமாகும். விடுதி, உணவு, காய்கறி வளர்ப்பு ஆகிய தொழில்கள் இதனால் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளன என்றார் அவர்.

2001ம் ஆண்டு முதல், திபெத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு தொடர்ந்து 7 ஆண்டு காலமாக 12 விழுக்காடு என்ற அதிகரிப்பை நனவாக்கியுள்ளது. இது 1959ம் ஆண்டில் இருந்ததை போல் 59 மடங்குகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
திபெத் மரபு மதத் தலைவரும், 11வது பான் சான் எர்தனி சோஜி ஜிம்பு இக்கண்காட்சியைப் பார்வையிட்டார். திபெத்தின் வளர்ச்சி நடுவண் அரசின் ஆதரவின் விளைவாகும் என்பதை உண்மைகள் காட்டுகின்றன என்று அவர் கூறினார். அவர் கூறியதாவது
தாய்நாட்டின் செழுமை மக்களின் இன்பம், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் வெற்றி ஆகியவற்றுக்கு நான் பிரார்த்தனை செய்து வருகின்றேன். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், திபெத் வளம் பெறும். திபெத் மக்களின் வாழ்க்கை மேலும் ஒளிமயமாகும். இவற்றின் மீது நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன் என்றார் அவர்.