• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-09 21:49:08    
ஜொல்மோ லுங்மா சிகரத்திலான ஒலிம்பிக் தீபத்தொட்டரோட்டம் பற்றிய நேபாள செய்தி ஊடகங்களின் கவனம்

cri

பெய்சிங் ஒலிம்பிக் தீபம் ஜொல்மோ லுங்மா சிகரத்தை எட்டியது பற்றி, நேபாளத்தின் செய்தி ஊடகங்கள் இன்று விபரமாக அறிவித்தன.

வளர்ந்து வரும் நேபாளம் என்ற நேபாள அரசின் நாளேடு, முக்கிய பக்கத்தில், சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவுக்கான நேபாள தலைமை அமைச்சர் Girija Prashad Koiralaஇன் வாழ்த்து கடிதத்தை வெளியிட்டது. 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு Koirala இக்கடிதத்தில் வாழ்த்து தெரிவித்தார்.

காட்மாண்டு போஸ்ட் நாளேடு, முக்கிய பக்கத்தில், பெய்சிங் ஒலிம்பிக் தீபம் ஜொல்மோ லுங்மா சிகரத்தை எட்டியது பற்றிய படங்களை வெளியிட்டதோடு, ஜொல்மோ லுங்மா சிகரத்திலான தீபத்தொட்டரோட்ட போக்கை விபரமாக அறிவித்தது.

இமய Times என்ற நேபாளத்தின் செய்தி ஊடகம், படங்கள் மற்றும் கட்டுரையின் மூலம், ஜொல்மோ லுங்மா சிகரத்திலான தீபத்தொட்டரோட்டம் பற்றிய செய்திகளை அறிவித்தது.