 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கான உரிமையை வெற்றிகரமாக பெற்றதற்கு பிறகான 7 ஆண்டுகளில், பெய்ஜிங்கில் பசுமைமயமாக்க விகிதம், விரைவாக உயர்ந்து வருகிறது என்று பெய்ஜிங் மாநகரின் தோட்டக் கலைப் பசுமைமயமாக்கப் பணியகத்தின் சர்வதேசத் திட்டப்பணிப் பிரிவின் இயக்குநர் Wang Xiaoping அண்மையில் அறிமுகப்படுத்தினார்.
2007ம் ஆண்டின் இறுதியில், பெய்ஜிங் மாநகரின் பசுமைமயமாக்க விகிதம், 43 விழுக்காட்டை எட்டியது. நபர்வாரி புல் தரை பரப்பு, 48 சதுர மீட்டராகும். நகர நபர்வாரி பொது புல் தரை பரப்பளவு, 12.6 சதுர மீட்டராகும். ஒலிம்பிக்கிற்கு வழங்கப்பட்ட வாக்குறுதி இதன் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
|