• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-05-12 20:04:20    
வாழ்வு கொடுக்கும் உணவுமுறை

cri
மனிதரின் அன்றாட உணவு பழக்கவழக்கம் உடலளவில் எல்லா செயல்களுக்கும் அடிப்படையாக இருக்கின்றது. காலை, மதியம், இரவு வேளைகளில் அளவான உணவு, முற்பகல் பத்தரை மற்றும் பிற்பகல் 4 மணியளவில் தேனீர் குடிக்கும் பழக்கம் என்பவை உணவை தக்க காலத்தில் உடகொள்ளும் முறைகளாக கொண்டுள்ளோம். நேரம் மாறிமாறி சாப்பிட்டாலோ அல்லது சில வேளைகளில் சாப்பிடாமல் இருப்பதை தொடர்ந்தாலோ பல விளைவுகள் ஏற்படுவதுண்டு. பல்வகை ஊட்டசத்து மிக்க உணவுவகை உடல் நலத்திற்கு மிக முக்கியம். மிகுந்த சத்தான உணவுமுறை பிறக்கின்ற குழந்தையில் ஆணா, பெண்ணா என்பதை நிர்ணயிக்கின்ற அளவுக்கு கூட செல்வாக்கை ஏற்படுத்துகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆண் பெண் குழந்தை என்றவுடன் சிந்தனைக்கான கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

தனது குடும்பத் தேவைகள் எல்லாம் நல்ல முறையில் நிறைவேற வேண்டும் என்று முறையிட குடும்பத்தலைவி ஒருவர் கோவிலுக்கு சென்றார். மண்டியிட்ட அவர் மூன்று தேவைகளுக்காக கடவுளிடம் முறையிட்டார். கடவுளே நான் 21 கோழி முட்டைகளை பொரிக்க வைத்துள்ளேன். இன்னும் இரண்டு நாட்களில் அவை பொரித்துவிடும். அந்த 21 முட்டைகளும் பெரிக்க வேண்டும். எல்லாமே பெடைக்கோழி குஞ்சிகளாக இருக்க வேண்டும் என்று முறையிட்டார். அடுத்ததாக, கடவுளே என்னுடைய வீட்டு பசு, கன்று போடுவதற்கு தயாராக இருக்கின்றது. ஓரிரு வாரத்திற்குள் அது பெற்றெடுக்கின்ற கன்று, பசுங்கன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டினார். தொடர்ந்து எனது மருமகள் பிரசவத்திற்காக அவரது தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அடுத்த மாதம் குழந்தை பிறக்க போகிறது. பிறக்கின்ற குழந்தை கண்டிப்பாக ஆண் குழந்தையாக இருக்க வேண்டுமென்று உருக்கமாக வேண்டினாரம். ஆண் குழந்தைகளை மிகவும் ஆவலோடும் பெண்களை அதற்கு அடுத்தப்படியாகவும் எதிர்பார்க்கும் சமூக எண்ணத்தை வெளிப்படுத்தும் இந்த கதை இன்றைய சமூகத்தின் உண்மையான நிலை.

ஆண் பெண் குழந்தைகள் எப்படி பிறக்கின்றன என்பதற்கு அறிவியல் ரீதியான XY விளக்க முறையிருந்தாலும், அண்மையில் வெளியான ஆய்வின் முடிவுகள் சத்தன உணவுமுறை ஆண் குழந்தைகள் பிறக்கின்ற வாய்ப்புகளை அதிகமாக்குகின்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. அதாவது ஊட்டச்சத்து மிகுதியான உணவு வகைகளை காலை உணவாக உண்டால் ஆண் குழந்தை பிறக்கும் வாய்ப்புகள் அதிகம் என இவ்வாய்வு தெரிவிக்கிறது. அது போல கலோரி ஆற்றல், தாது சத்துகள், மற்றும் ஊட்டசத்துகள் குறைந்த உணவு வகைகளை உட்கொண்டால் பெண் குழந்தைகளை பெற்றெடுக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு விபரங்கள் பிரிட்டன் டி ஃபாக்தோ அறிவியல் கழகத்தின் ராயல் சமூக B பிரிவு உயிரின அறிவியல் பதிப்பில் வெளியானது. பிரிட்டன் எக்ஸ்யேற்றர் பல்கலைக்கழகத்தின் ஃபெயன்னா மேத்தியுஸ் என்பவரும், அவரது சகாக்களும் பெண்களின் உணவு பழக்கவழக்கம் அல்லது உணவு முறை பிறக்கின்ற குழந்தை ஆண் அல்லது பெண் என்பதை நிர்ணயிப்பதில் எத்தகைய செல்வாக்கை ஏற்படுத்துகிறது என்று அறிய விரும்பினர்.

இது பற்றிய அவர்களின் ஆய்வு, கருத்தரித்து, தங்களின் தலைபிரசவத்திற்காக காத்திருந்த 740 தாய்மாரிடம் நடத்தப்பட்டது. கருத்தரிக்கும் முன்பும், பின்பும் உட்கொண்ட உணவுமுறை பற்றிய விரிவான விபரங்களை அளிக்க வேண்டுமென அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். கர்பினியான காலத்தில் உட்கொண்ட கலோரி அளவுகளின் அடிப்படையில் மூன்று குழுக்களாக அவர்கள் பிரிக்கப்பட்டனர். ஆய்வின் முடிவில் உயர் அளவிலான கலோரி உட்கொண்ட குழுவிலான 56 விழுக்காட்டினர் ஆண்குழந்தைகளை பெற்றெடுத்தனர். குறைவான கலோரி உடகொண்டோரில் 45 விழுக்காட்டினர் தான் ஆண்குழந்தைகளை பெற்றெடுத்தனர். மேலும் ஊட்டசத்துகள் உடகொள்ளப்பட்டதும் குழந்தைகள் ஆணாக பிறப்பதற்கு முக்கிய பங்காற்றி இருந்தது. ஆண்குழந்தை பெற்றெடுத்த குழுவிலுள்ள தாய்மார்கள் தான், அதிக அளவு பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் C, E மற்றும் B12 போன்ற ஊட்டசத்துக்களை உண்டிருந்தனர். தங்களது உணவில் வாரமொரு முறை கோதுமை, சோளம் போன்ற தானியவகைகளால் ஆன ஒரு கோப்பை காலை உணவை உட்கொண்டவர்களை விட அதனை நாள்தேறும் சாப்பிட்டவர்களில் தான் ஆண் குழந்தைபேறு அதிகமாக இருந்ததும் ஆய்வில் தெரியவந்தது. இந்த ஆய்வை வைத்து பார்த்தால் ஆண் குழந்தைகளின் பிறப்பை விட பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பது தெளிவாகின்றது.

கடந்த 40 ஆண்டுகாலமாக குழந்தை பிறப்பில் ஆண் பெண் விகிதத்தில் மாற்றம் இருப்பது தொடர்ந்து வருகிறது. இக்காலங்களில் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் மிக அதிகமாக இருக்கிறது. இவ்வாறான ஆண்-பெண் பிறப்பு விகித மாற்றம் ஆச்சரியமூட்டுகின்ற இவ்வாய்வின் கண்டுபிடிப்போடு ஒன்றிபோகிறது அல்லவா! இவ்வாய்வில் விளக்கப்பட்டுள்ள உயர்வான சத்துக்களை கொண்ட உணவு முறைக்கும் ஆண் குழந்தை பிறப்புக்கும் இடையிலான தொடர்பு பற்றிய கருத்துகள் எதிர்காலத்தில் இன்னும் அதிகமாக விளக்கப்படுவதும், வளர்ச்சிபெறுவதும் நிச்சயம். இதேபோல சோதனைக் குழாய் மூலமான கருத்தரிப்பு பற்றிய ஆராய்ச்சிகளில் உயர் அளவிலான குளுக்கோஸ் அல்லது சர்க்கரை சத்து ஆண் குழந்தை உருவாகும் வளர்ச்சியை தூண்டுகிறது என்பது ஏற்கெனவே அறியப்பட்டதே.

இது இவ்வாறிருக்க, உணவுமுறைகள் இரத்த அழுத்தத்தை குறைப்பதோடு மாரடைப்பு, வலிப்பு நோய்களிலிருந்து மக்களை காக்கும் என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட வேறொரு ஆய்வு காட்டியுள்ளது. சைமன்ஸ் கல்லூரி ஆய்வாளர் தெரசா ஃபொங் வழிநடத்திய இந்த ஆய்வில், உயர் இரத்த அழுத்தம் மற்றும் வலிப்பு நோயை கட்டுப்படுத்த அவற்றை தடுக்கின்ற உணவு வகைகள் உண்ணப்பட வேண்டும் என்று முன்மொழியப்பட்டது. உயர் இரத்த அழுத்தத்தை தடுக்கும் உணவு வகைகளில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கொழுப்பு சத்து குறைந்த பால், மற்றும் தாவர அடிப்படையிலான புரோத சத்துகள் ஆகியவை அடங்குகின்றன. 88,000 பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, 25 ஆண்டுகாலம் தொடர்ந்தது. ஆய்வாளர்கள் வழக்கமான அமெரிக்க உணவு வகைகளை உண்டவர்களையும், உயர் இரத்த அழுத்தத்தை தடுக்கும் முறைப்படியான உணவு வகைகளை உண்டவர்களையும் ஆய்வு செய்தனர். சாதாரண உணவு வழக்கம் கொண்டவரை விட, உயர் இரத்த அழுத்தத்தை தடுக்கும் முறைப்படியான உணவு உண்டவர்களில் 24 விழுக்காட்டினர் குறைவாக மாரடைப்பு நோய் கொண்டிருந்தனர். அதேபோல 18 விழுக்காட்டினர் குறைவாக வலிப்பு நோய் கொண்டிருந்தனர். இந்த குறைவான விழுக்காடு மாரடைப்பு மற்றும் வலிப்பு நோய்கள் மிகுந்து விட்ட அமெரிக்காவில், மிகவும் பொருளுள்ளதாகும். அங்கு 50 வயதான 5 பேரில் இரண்டு பேருக்கு, மாரடைப்பு மற்றும் வலிப்பு நோய்களை உருவாக்கும் இரத்தக்குழாய் சம்பந்தமான நோய்கள் காணப்படுகின்றன. இவ்வாய்வு நடத்தப்பட்டவர்கள் 1980 தில் ஆய்வை தொடங்கியபோது 30 முதல் 50 வயதினராக இருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

அது சரி. நாம் ஏனோதானோ என்று சதாரணமாக எடுத்துக்கொள்ளும் உணவு பழக்கவழக்கத்தில் எவ்வளவு விடயங்கள் பொதிந்து கிடக்கின்றன பார்த்தீர்களா? நாள்தோறும் 2400 கலோரி ஆற்றல் என்பது சராசரி மனிதனுக்கு தேவையாக இருக்கின்றபோது, உயர் அளவிலான சத்துக்கள் கொண்ட உணவுமுறை ஆண் குழந்தையின் பிறப்பை தூண்டுகிறது என்பதும் உயர் இரத்த அழுத்தத்தை தடுக்கும் உணவுமுறை மாரடைப்பு மற்றும் வலிப்பு நோய்களை குறைக்கின்றன என்பதும் மனித குலத்திற்கு மிக தேவையான செய்திகளே. நமது அன்றாட உணவுமுறை நம்முடைய இக்கால மற்றும் எதிர்கால வாழ்வை உருவாக்கும் ஆதாரம் என்பதை மறக்க வேண்டாம்.